*முஹ்சின் என்றால் யார் ஒருவர் அல்லாஹ் ஒருவனை மட்டும் அறவே கலப்பில்லாமல் வணங்கி, அவனுக்கு இணைவைப்பதை விட்டு முற்றிலும் விலகி இருந்து, நபிமார்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதங்களையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு, அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை நிறைவேற்றி, அவன் தடுத்த பாவங்களை விட்டு விலகி இருப்பாரோ அவர் ஆவார்.