ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
65 : 5

وَلَوْ اَنَّ اَهْلَ الْكِتٰبِ اٰمَنُوْا وَاتَّقَوْا لَكَفَّرْنَا عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَاَدْخَلْنٰهُمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟

நிச்சயமாக, வேதக்காரர்கள் (இத்தூதரை) நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அஞ்சி இருந்தால் அவர்களை விட்டும் அவர்களுடைய பாவங்களை நிச்சயமாக நாம் அகற்றிவிடுவோம். இன்னும், இன்பம் நிறைந்த சொர்க்கங்களில் அவர்களை நிச்சயமாக பிரவேசிக்கச் செய்வோம். info
التفاسير:

external-link copy
66 : 5

وَلَوْ اَنَّهُمْ اَقَامُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِمْ مِّنْ رَّبِّهِمْ لَاَكَلُوْا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ ؕ— مِنْهُمْ اُمَّةٌ مُّقْتَصِدَةٌ ؕ— وَكَثِیْرٌ مِّنْهُمْ سَآءَ مَا یَعْمَلُوْنَ ۟۠

இன்னும், தவ்ராத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (இந்த வேதத்)தையும் அவர்கள் நிலைநிறுத்தி இருந்தால் அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்கு கீழிருந்தும் நிச்சயமாக புசித்திருப்பார்கள். அவர்களில் ஒரு நேர்மையான கூட்டம் இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானோர், அவர்கள் செய்பவை எல்லாம் மிகக் கெட்டவை ஆகும். info
التفاسير:

external-link copy
67 : 5

یٰۤاَیُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ ؕ— وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهٗ ؕ— وَاللّٰهُ یَعْصِمُكَ مِنَ النَّاسِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟

தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை நீர் எடுத்துரைப்பீராக. நீர் (அவ்வாறு) செய்யவில்லையென்றால் அவனுடைய தூதை நீர் எடுத்துரைக்கவில்லை. மக்களிடமிருந்து அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான். info
التفاسير:

external-link copy
68 : 5

قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لَسْتُمْ عَلٰی شَیْءٍ حَتّٰی تُقِیْمُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ ؕ— وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ۚ— فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟

(நபியே!) கூறுவீராக, “வேதக்காரர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும் நீங்கள் நிலைநிறுத்தும் வரை நீங்கள் ஒரு விஷயத்திலும் இல்லை.’’ உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானவர்களுக்கு எல்லை மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே, நிராகரிப்பாளர்களான மக்களைப் பற்றி (நீர்) கவலைப்படாதீர். info
التفاسير:

external-link copy
69 : 5

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالصّٰبِـُٔوْنَ وَالنَّصٰرٰی مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟

நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், சாபியீன்கள், கிறித்தவர்கள் (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, நன்மை செய்தாரோ அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
70 : 5

لَقَدْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَاَرْسَلْنَاۤ اِلَیْهِمْ رُسُلًا ؕ— كُلَّمَا جَآءَهُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُهُمْ ۙ— فَرِیْقًا كَذَّبُوْا وَفَرِیْقًا یَّقْتُلُوْنَ ۟ۗ

திட்டமாக இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை நாம் வாங்கினோம். இன்னும், அவர்களிடம் (பல) தூதர்களை அனுப்பினோம். அவர்களுடைய மனம் விரும்பாதவற்றை இறைத் தூதர் ஒருவர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் அவர்கள் (நமது தூதர்களில்) சிலரை பொய்ப்பித்தனர், இன்னும், சிலரை கொன்றார்கள். info
التفاسير: