ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
6 : 48

وَّیُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِیْنَ وَالْمُشْرِكٰتِ الظَّآنِّیْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِ ؕ— عَلَیْهِمْ دَآىِٕرَةُ السَّوْءِ ۚ— وَغَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ وَلَعَنَهُمْ وَاَعَدَّ لَهُمْ جَهَنَّمَ ؕ— وَسَآءَتْ مَصِیْرًا ۟

இன்னும், நயவஞ்சகம் உடைய ஆண்களையும் நயவஞ்சகம் உடைய பெண்களையும் இணைவைக்கின்ற ஆண்களையும் இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் தண்டிப்பதற்காக (அவன் உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தான்). அவர்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் (அவன் தனது நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உதவமாட்டான் என்று) கெட்ட எண்ணம் எண்ணுகிறார்கள். அவர்கள் மீதுதான் கெட்ட சுழற்சி (சுற்ற) இருக்கிறது. (-அவர்கள்தான் தோற்கப் போகிறார்கள். நம்பிக்கையாளர்களின் கரத்தால் தண்டனையை சுவைக்க இருக்கிறார்கள்.) இன்னும், அல்லாஹ் அவர்கள் மீது கோபப்படுகிறான். அவர்களை சபிக்கிறான். அவர்களுக்கு நரகத்தை தயார் செய்திருக்கிறான். அது மிகக் கெட்ட மீளுமிடமாகும். info
التفاسير: