ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
34 : 43

وَلِبُیُوْتِهِمْ اَبْوَابًا وَّسُرُرًا عَلَیْهَا یَتَّكِـُٔوْنَ ۟ۙ

இன்னும். அவர்களின் வீடுகளுக்கு வெள்ளியினால் ஆன கதவுகளையும் அவற்றின் மீது அவர்கள் சாய்ந்து படுக்கும்படியான கட்டில்களையும் நாம் ஆக்கியிருப்போம். info
التفاسير:

external-link copy
35 : 43

وَزُخْرُفًا ؕ— وَاِنْ كُلُّ ذٰلِكَ لَمَّا مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَالْاٰخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِیْنَ ۟۠

இன்னும், (வெள்ளி மட்டுமல்ல,) தங்கத்தையும் (நாம் அவர்களுக்கு சொந்தமாக்கி இருப்போம்.) இவை எல்லாம் உலக வாழ்க்கையின் இன்பங்களே தவிர வேறு இல்லை. உமது இறைவனிடம் உள்ள மறுமை(யின் சொர்க்க வாழ்க்கை)யோ இறையச்சமுள்ளவர்களுக்கு இருக்கிறது. info
التفاسير:

external-link copy
36 : 43

وَمَنْ یَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَیِّضْ لَهٗ شَیْطٰنًا فَهُوَ لَهٗ قَرِیْنٌ ۟

யார் ரஹ்மானை நினைவு கூர்வதை(யும் அவனுடைய வேதத்தையும்) புறக்கணிப்பாரோ (-அவனது அத்தாட்சிகளைப் பார்த்து நம்பிக்கை கொள்ள மறுப்பாரோ) அவருக்கு ஒரு ஷைத்தானை நாம் சாட்டிவிடுவோம். ஆக, அவன் அவருக்கு (இணைபிரியா) நண்பனாக ஆகிவிடுவான். info
التفاسير:

external-link copy
37 : 43

وَاِنَّهُمْ لَیَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِیْلِ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ۟

நிச்சயமாக இவர்கள் (-இந்த ஷைத்தான்கள்) அவர்களை (-இணைவைப்பவர்களை நேரான) பாதையில் இருந்து தடுக்கிறார்கள். இன்னும், அ(ந்த இணைவைப்ப)வர்கள் நிச்சயமாக தாங்கள் நேர்வழி நடப்பவர்கள்தான் என்று எண்ணுகிறார்கள். info
التفاسير:

external-link copy
38 : 43

حَتّٰۤی اِذَا جَآءَنَا قَالَ یٰلَیْتَ بَیْنِیْ وَبَیْنَكَ بُعْدَ الْمَشْرِقَیْنِ فَبِئْسَ الْقَرِیْنُ ۟

இறுதியாக, (-ரஹ்மானின் நினைவை புறக்கணித்து வாழ்ந்த) அவன் நம்மிடம் வரும்போது, (தன்னை வழிகெடுத்த ஷைத்தானை நோக்கி) எனக்கு மத்தியிலும் உனக்கு மத்தியிலும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருக்க வேண்டுமே! என்று கூறுவான். அவன் (-ஷைத்தான்) மிகக் கெட்ட நண்பன் ஆவான். info
التفاسير:

external-link copy
39 : 43

وَلَنْ یَّنْفَعَكُمُ الْیَوْمَ اِذْ ظَّلَمْتُمْ اَنَّكُمْ فِی الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۟

நீங்கள் (இறைவனுக்கு இணைவைத்து) அநியாயம் செய்த காரணத்தால் நிச்சயமாக (வழிகெடுத்த) நீங்கள் (இன்னும், உங்களை பின்பற்றி வழிகெட்டவர்கள் எல்லோருமாக) தண்டனையில் இணைந்திருப்பது இன்றைய தினம் உங்களுக்கு அறவே பலனளிக்காது. (நரக தண்டனை உங்களுக்கு இடையில் பங்கிட்டுக் கொடுக்கப்படாமல், ஒவ்வொருவருக்கும் முழுமையான தண்டனை கொடுக்கப்படும்.) info
التفاسير:

external-link copy
40 : 43

اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ اَوْ تَهْدِی الْعُمْیَ وَمَنْ كَانَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

ஆக, (அல்லாஹ்வின் வேத ஆதாரங்களை செவி ஏற்க முடியாமல் யாரை அல்லாஹ் செவிடர்களாகவும் அவனது அத்தாட்சிகளை பார்க்கமுடியாமல் யாரை அல்லாஹ் குருடர்களாகவும் ஆக்கிவிட்டானோ) அந்த செவிடர்களை நீர் செவி ஏற்க வைக்க முடியுமா? அல்லது அந்த குருடர்களையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவர்களையும் நீர் நேர்வழி செலுத்திட முடியுமா? info
التفاسير:

external-link copy
41 : 43

فَاِمَّا نَذْهَبَنَّ بِكَ فَاِنَّا مِنْهُمْ مُّنْتَقِمُوْنَ ۟ۙ

ஆகவே, (நபியே!) ஒன்று நிச்சயமாக உம்மை நாம் மரணிக்கச் செய்வோம். பிறகு, நிச்சயமாக நாம் அவர்களிடம் பழிவாங்குவோம். info
التفاسير:

external-link copy
42 : 43

اَوْ نُرِیَنَّكَ الَّذِیْ وَعَدْنٰهُمْ فَاِنَّا عَلَیْهِمْ مُّقْتَدِرُوْنَ ۟

அல்லது, நாம் அவர்களுக்கு எச்சரித்ததை (-தண்டனையை) நாம் உமக்கு (உமது வாழ்நாளிலேயே) காண்பிப்போம். ஆக, நிச்சயமாக நாம் அவர்கள் மீது முழு ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்! info
التفاسير:

external-link copy
43 : 43

فَاسْتَمْسِكْ بِالَّذِیْۤ اُوْحِیَ اِلَیْكَ ۚ— اِنَّكَ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

ஆகவே, (நபியே!) உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்ட(இந்த வேதத்)தை உறுதியாக பற்றிப்பிடிப்பீராக! நிச்சயமாக நீர் நேரான பாதையில் இருக்கிறீர். info
التفاسير:

external-link copy
44 : 43

وَاِنَّهٗ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ ۚ— وَسَوْفَ تُسْـَٔلُوْنَ ۟

நிச்சயமாக இ(ந்த வேதமான)து உமக்கும் உமது மக்களுக்கும் ஒரு (பெரிய) சிறப்பாகும். (இதன் படி நீங்கள் அமல் செய்தது பற்றி) உங்களிடம் விரைவில் விசாரிக்கப்படும். info
التفاسير:

external-link copy
45 : 43

وَسْـَٔلْ مَنْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُّسُلِنَاۤ اَجَعَلْنَا مِنْ دُوْنِ الرَّحْمٰنِ اٰلِهَةً یُّعْبَدُوْنَ ۟۠

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நமது தூதர்க(ளின் சமுதாயத்தை சேர்ந்த உண்மை நம்பிக்கையாளர்க)ளை நீர் விசாரிப்பீராக! “ரஹ்மானை அன்றி வணங்கப்படுகின்ற (வேறு) தெய்வங்களை நாம் (அவர்களுக்கு) ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோமா?” என்று. info
التفاسير:

external-link copy
46 : 43

وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَقَالَ اِنِّیْ رَسُوْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟

திட்டவட்டமாக நாம் மூஸாவை ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்களிடம் நமது அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். ஆக, (அவர்களை நோக்கி) அவர் கூறினார்: “நிச்சயமாக நான் (உங்களுக்கு அனுப்பப்பட்ட) அகிலங்களின் இறைவனுடைய தூதர் ஆவேன்.” info
التفاسير:

external-link copy
47 : 43

فَلَمَّا جَآءَهُمْ بِاٰیٰتِنَاۤ اِذَا هُمْ مِّنْهَا یَضْحَكُوْنَ ۟

ஆக, அவர்களிடம் அவர் நமது அத்தாட்சிகளுடன் வந்தபோது, அப்போது அவர்கள் அவற்றைப் பார்த்து (கேலியாக) சிரித்தார்கள். info
التفاسير: