ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
92 : 4

وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ یَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَأً ۚ— وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَأً فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ یَّصَّدَّقُوْا ؕ— فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ؕ— وَاِنْ كَانَ مِنْ قَوْمٍ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ فَدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی اَهْلِهٖ وَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۚ— فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ شَهْرَیْنِ مُتَتَابِعَیْنِ ؗ— تَوْبَةً مِّنَ اللّٰهِ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟

தவறுதலாகவே தவிர, ஒரு நம்பிக்கையாளரை கொல்வது இன்னொரு நம்பிக்கையாளருக்கு ஆகுமானதல்ல. எவராவது ஒரு நம்பிக்கையாளரை தவறுதலாகக் கொன்றால் (அதற்குப் பரிகாரம்) நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிட வேண்டும்; இன்னும் (இறந்த) அவருடைய குடும்பத்தாரிடம் (அதற்குரிய) நஷ்ட ஈட்டை ஒப்படைக்க வேண்டும். (ஆனால், குடும்பத்தினர் நஷ்ட ஈட்டுத் தொகையை கொலையாளிக்கு) தானமாக்கினால் தவிர. (கொல்லப்பட்ட) அவன் உங்கள் எதிரி சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்து, அவர் நம்பிக்கையாளராகவும் இருந்தால், நம்பிக்கையாளரான ஓர் அடிமையை (மட்டும்) உரிமையிடவேண்டும். (கொல்லப்பட்ட) அவர் உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் (சமாதான, நட்பு) உடன்படிக்கை உள்ள சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தால் அவருடைய குடும்பத்தினரிடம் நஷ்டஈடு ஒப்படைக்கப்படும்: இன்னும், நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிடவேண்டும். (நஷ்டஈடு வழங்க) எவர் வசதி பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பிருத்தல் வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். info
التفاسير: