ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
24 : 4

وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ۚ— كِتٰبَ اللّٰهِ عَلَیْكُمْ ۚ— وَاُحِلَّ لَكُمْ مَّا وَرَآءَ ذٰلِكُمْ اَنْ تَبْتَغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِیْنَ غَیْرَ مُسٰفِحِیْنَ ؕ— فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِیْضَةً ؕ— وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا تَرٰضَیْتُمْ بِهٖ مِنْ بَعْدِ الْفَرِیْضَةِ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟

பெண்களில் மணமானவர்களும் (உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளனர்). (போரில்) உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களைத் தவிர. (அந்த அடிமைகளை நீங்கள் திருமணம் செய்யலாம்.) (இவை) உங்கள் மீது (விதிக்கப்பட்ட) அல்லாஹ்வின் சட்டமாகும். (மேல் விவரிக்கப்பட்ட) இவர்களைத் தவிர உள்ளவர்களை உங்கள் செல்வங்கள் மூலம் (‘மஹ்ர்’ கொடுத்து மணம்புரியத்) தேடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்களோ ஒழுக்கமுள்ளவர்களாக, சட்டவிரோத உடலுறவில் ஈடுபடாதவர்களாக இருக்கவேண்டும். அவர்களில் எவரிடம் நீங்கள் (மணமுடித்து) சுகம் அனுபவித்தீர்களோ அவர்களுக்கு அவர்களுடைய மஹ்ர்களை கடமையாக கொடுத்து விடுங்கள். கடமையான மஹ்ருக்குப் பின்னர் நீங்கள் உங்களுக்குள் விரும்பி (குறைத்து)க் கொள்வதில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். info
التفاسير: