ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
19 : 4

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَحِلُّ لَكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا ؕ— وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ ۚ— وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ ۚ— فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّیَجْعَلَ اللّٰهُ فِیْهِ خَیْرًا كَثِیْرًا ۟

நம்பிக்கையாளர்களே! (இறந்தவரின் சொத்துடன் அவரின்) பெண்களை(யும்) பலவந்தமாக நீங்கள் சொந்தம் கொள்வது உங்களுக்கு ஆகுமாகாது. இன்னும், அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை நீங்கள் எடுத்துக் கொள்வதற்காக அவர்க(ளுடன் வாழ விருப்பமில்லாமல் அவர்க)ளை தடுத்து வை(த்துகொண்டு அவர்களாக உங்களிடமிருந்து விடுதலையை வேண்டி, நீங்கள் கொடுத்த மஹ்ரை திரும்ப கொடுக்கும்படி செய்வதற்கு அவர்களை நிர்ப்பந்தி)க்காதீர்கள். எனினும், வெளிப்படையான ஒரு மானக்கேடானதை அவர்கள் செய்தால் தவிர. (அப்போது, நீங்கள் கொடுத்த மஹ்ரில் சிலவற்றை நீங்கள் திரும்ப பெற்று அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் அவர்களை தடுத்து வைப்பதும் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதும் கூடும்). இன்னும், (உங்கள் மனைவிகள் ஒழுக்கமானவர்களாக இருந்தால்) அவர்களுடன் நல்ல முறையில் (கண்ணியமாக பரஸ்பர அன்புடன் உரிமைகளையும் கடமைகளையும் பேணி) வாழுங்கள். ஆக, நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மையை ஆக்கலாம். info
التفاسير: