ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
171 : 4

یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ— اِنَّمَا الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ— اَلْقٰىهَاۤ اِلٰی مَرْیَمَ وَرُوْحٌ مِّنْهُ ؗ— فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۫— وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ؕ— اِنْتَهُوْا خَیْرًا لَّكُمْ ؕ— اِنَّمَا اللّٰهُ اِلٰهٌ وَّاحِدٌ ؕ— سُبْحٰنَهٗۤ اَنْ یَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ— لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟۠

வேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் எல்லை மீறாதீர்கள். இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர கூறாதீர்கள். மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் எல்லாம், அல்லாஹ்வுடைய தூதரும், அவனுடைய (‘குன்’ என்ற) வார்த்தையும், - அ(ந்த வார்த்)தை(யை) மர்யமுக்கு சேர்ப்பித்தான்- அவனிலிருந்து (படைக்கப்பட்ட) ஓர் உயிரும் ஆவார். ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்) ‘மூவர்’ என்று கூறாதீர்கள். (இக்கூற்றை விட்டு) விலகுங்கள். (அது) உங்களுக்கு மிக நல்லதாகும். நிச்சயமாக அல்லாஹ் மட்டும்தான் (உண்மையில் வணங்கத்தகுதியான) ஒரே ஓர் இறைவன் ஆவான். அவனுக்கு குழந்தை இருப்பதை விட்டு அவன் மிகப் பரிசுத்தமானவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன். info
التفاسير: