ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
156 : 3

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ كَفَرُوْا وَقَالُوْا لِاِخْوَانِهِمْ اِذَا ضَرَبُوْا فِی الْاَرْضِ اَوْ كَانُوْا غُزًّی لَّوْ كَانُوْا عِنْدَنَا مَا مَاتُوْا وَمَا قُتِلُوْا ۚ— لِیَجْعَلَ اللّٰهُ ذٰلِكَ حَسْرَةً فِیْ قُلُوْبِهِمْ ؕ— وَاللّٰهُ یُحْیٖ وَیُمِیْتُ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பாளர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்களுடைய (முஃமினான) சகோதரர்கள் பூமியில் பயணித்தால் அல்லது போர்புரிபவர்களாக இருந்தால் அவர்களுக்கு (அந்நிராகரிப்பாளர்கள்) கூறினார்கள்: “அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் மரணித்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.’’ அவர்களுடைய உள்ளங்களில் இதை (-இந்த நம்பிக்கையை) ஒரு கைசேதமாக ஆக்குவதற்காகவே (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). அல்லாஹ்தான் வாழவைக்கிறான். இன்னும், மரணிக்க வைக்கிறான். இன்னும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير: