ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
154 : 3

ثُمَّ اَنْزَلَ عَلَیْكُمْ مِّنْ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا یَّغْشٰی طَآىِٕفَةً مِّنْكُمْ ۙ— وَطَآىِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ یَظُنُّوْنَ بِاللّٰهِ غَیْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِیَّةِ ؕ— یَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَیْءٍ ؕ— قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ ؕ— یُخْفُوْنَ فِیْۤ اَنْفُسِهِمْ مَّا لَا یُبْدُوْنَ لَكَ ؕ— یَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَیْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ؕ— قُلْ لَّوْ كُنْتُمْ فِیْ بُیُوْتِكُمْ لَبَرَزَ الَّذِیْنَ كُتِبَ عَلَیْهِمُ الْقَتْلُ اِلٰی مَضَاجِعِهِمْ ۚ— وَلِیَبْتَلِیَ اللّٰهُ مَا فِیْ صُدُوْرِكُمْ وَلِیُمَحِّصَ مَا فِیْ قُلُوْبِكُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

பிறகு, துயரத்திற்குப் பின்னர் உங்கள் மீது சிறு நித்திரையை மன நிம்மதிக்காக இறக்கினான். உங்களில் ஒரு வகுப்பாரை அது சூழ்ந்தது. (வேறு) ஒரு வகுப்பாரோ, அவர்களுக்கு அவர்களது ஆன்மாக்கள் அதிக கவலையைத் தந்தன. (இணைவைப்பவர்களின்) மடத்தனமான எண்ணத்தைப் போன்று அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாததை எண்ணுகிறார்கள். “நமக்கு அதிகாரத்தில் ஏதும் உண்டா?’’ என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக: “நிச்சயமாக எல்லா அதிகாரமும் அல்லாஹ்விற்குரியதே.’’ உமக்கு வெளிப்படுத்தாதவற்றை அவர்கள் தங்களுக்குள் மறைக்கிறார்கள். “அதிகாரத்தில் ஏதும் நமக்கு இருந்திருந்தால், இங்கு கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” எனக் கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்தாலும் எவர்கள் மீது (போரில்) கொல்லப்படுவது விதிக்கப்பட்டுவிட்டதோ அவர்கள் தாங்கள் கொல்லப்படும் இடங்களை நோக்கி வெளியாகி வந்தே தீருவார்கள்.’’ (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களிலுள்ளவற்றைப் பரிசோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு செய்தான்). இன்னும், நெஞ்சங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير: