ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
38 : 3

هُنَالِكَ دَعَا زَكَرِیَّا رَبَّهٗ ۚ— قَالَ رَبِّ هَبْ لِیْ مِنْ لَّدُنْكَ ذُرِّیَّةً طَیِّبَةً ۚ— اِنَّكَ سَمِیْعُ الدُّعَآءِ ۟

அவ்விடத்தில் ஸகரிய்யா தன் இறைவனை பிரார்த்தித்தார். “என் இறைவா! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல (தூய்மையான) சந்ததியை தா! நிச்சயமாக நீ பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன்’’ எனக் கூறினார். info
التفاسير:

external-link copy
39 : 3

فَنَادَتْهُ الْمَلٰٓىِٕكَةُ وَهُوَ قَآىِٕمٌ یُّصَلِّیْ فِی الْمِحْرَابِ ۙ— اَنَّ اللّٰهَ یُبَشِّرُكَ بِیَحْیٰی مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَیِّدًا وَّحَصُوْرًا وَّنَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟

ஆக, அவர் மாடத்தில் நின்று தொழுது கொண்டிருக்க அவரை வானவர்கள் அழைத்தார்கள்: “அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை உண்மைப்படுத்தக் கூடியவராக, தலைவராக, சரீர இன்பத்தைத் துறந்தவராக, நபியாக, நல்லோரில் ஒருவராக இருக்கின்ற யஹ்யா (என்ற ஒரு மக)வைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான்’’ (என்று வானவர்கள் கூறினார்கள்). info
التفاسير:

external-link copy
40 : 3

قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِیَ الْكِبَرُ وَامْرَاَتِیْ عَاقِرٌ ؕ— قَالَ كَذٰلِكَ اللّٰهُ یَفْعَلُ مَا یَشَآءُ ۟

“என் இறைவா! நானோ முதுமை அடைந்திருக்க, என் மனைவியோ மலடியாக இருக்க, எனக்கு எவ்வாறு குழந்தை கிடைக்கும்” என்று (ஸகரிய்யா) கூறினார். “(அல்லாஹ்வின் கட்டளை) இவ்வாறுதான். அல்லாஹ், தான் நாடியதை செய்வான்” என்று அல்லாஹ் (பதில்) கூறினான். info
التفاسير:

external-link copy
41 : 3

قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ— قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَیَّامٍ اِلَّا رَمْزًا ؕ— وَاذْكُرْ رَّبَّكَ كَثِیْرًا وَّسَبِّحْ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟۠

“என் இறைவா! எனக்கோர் அத்தாட்சியை ஏற்படுத்து!’’ என்று (ஸகரிய்யா) கூறினார். “உமக்கு அத்தாட்சியாவது, சாடையாக தவிர மூன்று நாட்கள் மக்களுடன் நீர் பேசமுடியாமல் இருப்பதாகும். இன்னும், உமது இறைவனை அதிகம் நினைவு கூர்வீராக! மாலையிலும் காலையிலும் (ஸுப்ஹானல்லாஹ் என்று கூறி) அவனைத் துதிப்பீராக!’’ என்று அல்லாஹ் (பதில்) கூறினான். info
التفاسير:

external-link copy
42 : 3

وَاِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰىكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰىكِ عَلٰی نِسَآءِ الْعٰلَمِیْنَ ۟

“மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்தான்; உம்மைப் பரிசுத்தப்படுத்தினான்; அகிலத்தார்களின் பெண்களைவிட உம்மைத் தேர்ந்தெடுத்தான்” என்று வானவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! info
التفاسير:

external-link copy
43 : 3

یٰمَرْیَمُ اقْنُتِیْ لِرَبِّكِ وَاسْجُدِیْ وَارْكَعِیْ مَعَ الرّٰكِعِیْنَ ۟

மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவீராக! (-நீண்ட நேரம் நின்று தொழுவீராக!) இன்னும், சிரம் பணிவீராக! (தொழுகையில்) குனிபவர்களுடன் குனிவீராக! info
التفاسير:

external-link copy
44 : 3

ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهِ اِلَیْكَ ؕ— وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ یُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَیُّهُمْ یَكْفُلُ مَرْیَمَ ۪— وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ یَخْتَصِمُوْنَ ۟

(நபியே!) இவை மறைவான செய்திகளிலிருந்து உள்ளவை. இவற்றை உமக்கு வஹ்யி (மூலம்) அறிவிக்கிறோம். அவர்களில் யார் மர்யமை பொறுப்பே(ற்று வள)ர்ப்பார் என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்(து சோதித்)தபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்தபோதும் நீர் அவர்களிடம் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
45 : 3

اِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ یُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۙۗ— اسْمُهُ الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ وَجِیْهًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ

“மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையினால் உமக்கு (ஒரு குழந்தையை கொடுக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம் ஆகும். (அவர்) இந்த உலகத்திலும் மறுமையிலும் கம்பீரமானவராகவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களிலும் இருப்பார்’’ என்று வானவர்கள் கூறிய சமயத்தை (நபியே) நினைவு கூர்வீராக! info
التفاسير: