ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
78 : 28

قَالَ اِنَّمَاۤ اُوْتِیْتُهٗ عَلٰی عِلْمٍ عِنْدِیْ ؕ— اَوَلَمْ یَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا ؕ— وَلَا یُسْـَٔلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ ۟

அவன் கூறினான்: “இதை நான் வழங்கப்பட்டதெல்லாம் என்னிடம் உள்ள அறிவினால்தான்.” இவனுக்கு முன்னர் பல தலைமுறையினர்களில் இவனைவிட எவர்கள் கடுமையான பலமுடையவர்களாகவும் (செல்வங்களை) மிக அதிகமாக சேகரித்தவர்களாகவும் இருந்தார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? இன்னும், (மறுமை நாளில் நிராகரிப்பாளர்களான) குற்றவாளிகள் தங்கள் குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்படமாட்டார்கள். (அவர்கள் விசாரனையின்றி நரக நெருப்பில் வீசி எறியப்படுவார்கள்.) info
التفاسير:

external-link copy
79 : 28

فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ فِیْ زِیْنَتِهٖ ؕ— قَالَ الَّذِیْنَ یُرِیْدُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا یٰلَیْتَ لَنَا مِثْلَ مَاۤ اُوْتِیَ قَارُوْنُ ۙ— اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِیْمٍ ۟

ஆக, அவன் தனது அலங்காரத்தில் தனது மக்களுக்கு முன் வெளியில் வந்தான். உலக வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் (அவனைப் பார்த்து) கூறினார்கள்: “காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று நமக்கும் (செல்வங்கள்) இருக்க வேண்டுமே! நிச்சயமாக அவன் பெரும் பேருடையவன்.” info
التفاسير:

external-link copy
80 : 28

وَقَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ وَیْلَكُمْ ثَوَابُ اللّٰهِ خَیْرٌ لِّمَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ۚ— وَلَا یُلَقّٰىهَاۤ اِلَّا الصّٰبِرُوْنَ ۟

இன்னும், கல்வி வழங்கப்பட்டவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்! நம்பிக்கை கொண்டு நன்மை செய்பவருக்கு அல்லாஹ்வின் நற்கூலி மிகச் சிறந்ததாகும்.” இதற்கு (-இந்த வார்த்தையை கூறுவதற்கு) பொறுமையாளர்களைத் தவிர வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
81 : 28

فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ ۫— فَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ یَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ ؗۗ— وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِیْنَ ۟

ஆக, அவனையும் அவனுடைய இல்லத்தையும் பூமியில் சொருகி விட்டோம். ஆக, அல்லாஹ்வை அன்றி உதவுகின்ற கூட்டம் ஏதும் அவனுக்கு இல்லை. அவன் (தனக்குத்தானே) உதவி செய்துகொள்பவர்களிலும் இல்லை. info
التفاسير:

external-link copy
82 : 28

وَاَصْبَحَ الَّذِیْنَ تَمَنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ یَقُوْلُوْنَ وَیْكَاَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ ۚ— لَوْلَاۤ اَنْ مَّنَّ اللّٰهُ عَلَیْنَا لَخَسَفَ بِنَا ؕ— وَیْكَاَنَّهٗ لَا یُفْلِحُ الْكٰفِرُوْنَ ۟۠

இன்னும், நேற்று அவனுடைய இடத்தை (-அவனைப் போன்று ஆகவேண்டுமென) ஆசைப்பட்டவர்கள் காலையில் கூறினார்கள்: “நாம் பார்க்கவில்லையா, நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான். (தான் நாடியவர்களுக்கு) சுருக்கி விடுகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்கவில்லை என்றால் அவன் நம்மையும் (பூமியில்) சொருகியிருப்பான். நாம் பார்க்கவில்லையா, நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.” info
التفاسير:

external-link copy
83 : 28

تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِیْنَ لَا یُرِیْدُوْنَ عُلُوًّا فِی الْاَرْضِ وَلَا فَسَادًا ؕ— وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟

(இன்பங்கள் நிறைந்த சொர்க்கமாகிய) அதுதான் மறுமை இல்லமாகும். எவர்கள் பூமியில் அநியாயத்தையோ (அராஜகத்தையோ,) கெடுதியையோ விரும்பவில்லையோ அவர்களுக்கு அதை நாம் ஆக்குவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு. info
التفاسير:

external-link copy
84 : 28

مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَیْرٌ مِّنْهَا ۚ— وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَلَا یُجْزَی الَّذِیْنَ عَمِلُوا السَّیِّاٰتِ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

எவர் நன்மைகளை கொண்டு வருவாரோ அவருக்கு அவற்றின் பொருட்டால் நற்கூலி கிடைக்கும். எவர்கள் பாவங்களை கொண்டு வருவார்களோ, ஆக, அந்த பாவங்களைச் செய்தவர்கள் அவர்கள் எதை செய்து கொண்டிருந்தார்களோ அதற்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார்கள். info
التفاسير: