ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
40 : 27

قَالَ الَّذِیْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ یَّرْتَدَّ اِلَیْكَ طَرْفُكَ ؕ— فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّیْ ۫— لِیَبْلُوَنِیْۤ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ ؕ— وَمَنْ شَكَرَ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّیْ غَنِیٌّ كَرِیْمٌ ۟

தன்னிடம் வேதத்தின் ஞானம் இருந்த (மனிதர்) ஒருவர் கூறினார்: “(நீர் தூரமாக ஒன்றை பார்த்த பின்னர்,) உமது பார்வை உன் பக்கம் திரும்புவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன்.” ஆக, (அவ்வாறே கொண்டு வரப்பட்ட) அதை (-அந்த அரசகட்டிலை) தன்னிடம் (-தனக்கு முன்னால்) முழுமையாக வந்து சேர்ந்து விட்டதை சுலைமான் பார்த்தபோது, (எனது இந்த ஆட்சி, அதிகாரம், படைபலம், அறிவு ஆகிய) இவை என் இறைவனின் அருளினால் கிடைத்ததாகும். நான் நன்றி செலுத்துகிறேனா, அல்லது நன்றி கெட்டவனாக இருக்கிறேனா என்று அவன் என்னை சோதிப்பதற்காக (இவற்றை எனக்கு தந்துள்ளான்). யார் நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் அவருக்குத்தான் நன்மையாகும். யார் நிராகரிப்பாரோ (-நன்றி கெடுவாரோ அவரால் அல்லாஹ்விற்கு எவ்வித குறையும் இல்லை.) ஏனெனில், என் இறைவன் முற்றிலும் தேவை அற்றவன் (-தன்னில் நிறைவானவன், எல்லோருக்கும் கணக்கின்றி கொடுக்கும்) பெரும் தயாளன் ஆவான். info
التفاسير: