ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
33 : 24

وَلْیَسْتَعْفِفِ الَّذِیْنَ لَا یَجِدُوْنَ نِكَاحًا حَتّٰی یُغْنِیَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ— وَالَّذِیْنَ یَبْتَغُوْنَ الْكِتٰبَ مِمَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِیْهِمْ خَیْرًا ۖۗ— وَّاٰتُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِیْۤ اٰتٰىكُمْ ؕ— وَلَا تُكْرِهُوْا فَتَیٰتِكُمْ عَلَی الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّتَبْتَغُوْا عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَمَنْ یُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

எவர்கள் திருமணத்திற்கு வசதி பெறவில்லையோ அவர்கள் அல்லாஹ் அவர்களை தன் அருளால் வசதியுள்ளவர்களாக ஆக்கும் வரை ஒழுக்கமாக இருக்கட்டும். இன்னும், உங்கள் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் உரிமைப் பத்திரம் எழுதி விடுதலை பெற எவர்கள் விரும்புகிறார்களோ அவர்களில் நீங்கள் நன்மையை (-நம்பிக்கையையும் நல்ல குணத்தையும்) அறிந்தால் அவர்களுக்கு உரிமைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள். இன்னும், (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு அல்லாஹ் கொடுத்த அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து அவர்களுக்கு கொடு(த்து அவர்கள் விடுதலை பெற உதவு)ங்கள். நீங்கள் உலக வாழ்க்கையின் செல்வத்தை சம்பாதிக்க விரும்பி உங்கள் அடிமை பெண்களை விபச்சாரத்தில் நிர்ப்பந்த(மாக ஈடு)படுத்தாதீர்கள், அந்த அடிமைப் பெண்கள் பத்தினித்தனத்தை விரும்பினால். இன்னும், யார் அந்த அடிமை பெண்களை (விபச்சாரம் செய்ய) நிர்ப்பந்திப்பாரோ நிச்சயமாக அல்லாஹ் அந்த அடிமை பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் அவர்களை மன்னிப்பவன், (அவர்கள் மீது) கருணை காட்டுபவன் ஆவான். info
التفاسير: