ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
37 : 24

رِجَالٌ ۙ— لَّا تُلْهِیْهِمْ تِجَارَةٌ وَّلَا بَیْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَاِیْتَآءِ الزَّكٰوةِ— یَخَافُوْنَ یَوْمًا تَتَقَلَّبُ فِیْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۟ۙ

(இறை இல்லங்களில் தொழுகின்ற) ஆண்கள் - வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் ஸகாத் கொடுப்பதை விட்டும் (இன்னும் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் தூய்மையாக செய்வதை விட்டும்) அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும். info
التفاسير:

external-link copy
38 : 24

لِیَجْزِیَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا عَمِلُوْا وَیَزِیْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ— وَاللّٰهُ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟

(அவர்கள் அப்படி அமல் செய்தது ஏனெனில்,) அவர்கள் செய்த மிக அழகிய நன்மைகளுக்கு அல்லாஹ் கூலி வழங்குவதற்காகவும் தனது அருளிலிருந்து அவர்களுக்கு மேலும் அதிகப்படுத்துவதற்காகவும் ஆகும். அல்லாஹ் தான் நாடியவருக்கு கணக்கின்றி வழங்குகிறான். info
التفاسير:

external-link copy
39 : 24

وَالَّذِیْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۭ بِقِیْعَةٍ یَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ— حَتّٰۤی اِذَا جَآءَهٗ لَمْ یَجِدْهُ شَیْـًٔا وَّوَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰىهُ حِسَابَهٗ ؕ— وَاللّٰهُ سَرِیْعُ الْحِسَابِ ۟ۙ

நிராகரிப்பாளர்கள் - அவர்களுடைய செயல்கள் வெட்டவெளியில் இருக்கும் கானல் நீரைப் போலாகும். (தாகித்தவர்) அதை தண்ணீராக எண்ணுகிறார். இறுதியாக, அதனிடம் அவர் வந்தால் அதை அறவே (அங்கு) காணமாட்டார். இன்னும், அல்லாஹ்வைத்தான் அதனிடம் காண்பார். ஆக, அவன் அவருடைய கணக்கை அவருக்கு முழுமையாக நிறைவேற்றுவான். இன்னும், கேள்வி கணக்கு கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன். info
التفاسير:

external-link copy
40 : 24

اَوْ كَظُلُمٰتٍ فِیْ بَحْرٍ لُّجِّیٍّ یَّغْشٰىهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌ ؕ— ظُلُمٰتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ ؕ— اِذَاۤ اَخْرَجَ یَدَهٗ لَمْ یَكَدْ یَرٰىهَا ؕ— وَمَنْ لَّمْ یَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ ۟۠

அல்லது, ஆழமான கடலில் உள்ள இருள்களைப் போலாகும் (அவர்களது செயல்கள்). அதை (-அந்த கடலை) அலைக்கு மேல் அலை சூழ்ந்திருக்க, அதற்கு மேல் மேகம் சூழ்ந்திருக்கிறது. (இப்படி) இருள்கள் -அவற்றில் சில, சிலவற்றுக்கு- மேலாக (-கடுமையாக) இருக்கிறது. அவன் தனது கையை வெளியே நீட்டினால் அதை அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு (நேர்வழி எனும்) ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவருக்கு எவ்வித ஒளியும் இல்லை. info
التفاسير:

external-link copy
41 : 24

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُسَبِّحُ لَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّیْرُ صٰٓفّٰتٍ ؕ— كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِیْحَهٗ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِمَا یَفْعَلُوْنَ ۟

(நபியே!) நீர் பார்க்கவில்லையா! நிச்சயமாக அல்லாஹ் - வானத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் வரிசையாக பறக்கின்ற பறவைகளும் அவனை துதிக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவனைத் தொழுவதையும் அவனைத் துதிப்பதையும் திட்டமாக அறிந்துள்ளனர். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
42 : 24

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟

இன்னும், அல்லாஹ்விற்கே வானங்களின் பூமியின் ஆட்சி உரியது. இன்னும், அல்லாஹ்வின் பக்கமே (இறுதி) மீளுதல் இருக்கிறது. info
التفاسير:

external-link copy
43 : 24

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُزْجِیْ سَحَابًا ثُمَّ یُؤَلِّفُ بَیْنَهٗ ثُمَّ یَجْعَلُهٗ رُكَامًا فَتَرَی الْوَدْقَ یَخْرُجُ مِنْ خِلٰلِهٖ ۚ— وَیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِیْهَا مِنْ بَرَدٍ فَیُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ وَیَصْرِفُهٗ عَنْ مَّنْ یَّشَآءُ ؕ— یَكَادُ سَنَا بَرْقِهٖ یَذْهَبُ بِالْاَبْصَارِ ۟ؕ

(நபியே!) நீர் பார்க்கவில்லையா!? நிச்சயமாக அல்லாஹ் மேகங்களை (ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு) ஓட்டுகிறான். பிறகு, அவற்றுக்கு இடையில் இணை(த்து ஒன்று சேர்)க்கிறான், பிறகு, அவற்றை ஒன்றிணைக்கப்பட்டதாக ஆக்குகிறான். ஆக, அவற்றுக்கு இடையில் இருந்து மழை வெளிவருவதை நீர் பார்க்கிறீர். இன்னும், வானத்திலிருந்து, அதில் உள்ள பனி மலைகளில் இருந்து அவன் (நீரை, ஆலங்கட்டிகளை) இறக்குகிறான். அதன் மூலம் அவன், தான் நாடியவர்களை தண்டிக்கிறான். இன்னும், தான் நாடியவர்களை விட்டும் அவன் அதை திருப்பிவிடுகிறான். அதன் மின்னலின் கடுமையான வெளிச்சம் பார்வைகளை பறித்துவிடவும் நெருங்கி விடுகிறது. info
التفاسير: