ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
18 : 23

وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِی الْاَرْضِ ۖۗ— وَاِنَّا عَلٰی ذَهَابٍ بِهٖ لَقٰدِرُوْنَ ۟ۚ

இன்னும், வானத்திலிருந்து மழையை (குறிப்பிட்ட) ஓர் அளவிற்கு நாம் இறக்கினோம். ஆக, அதை பூமியில் தங்க வைத்தோம். (நாம் நாடினால்) நிச்சயமாக நாம் அதை (பூமியிலிருந்து) போக்கி விடுவதற்கு ஆற்றலுடையவர்கள். info
التفاسير:

external-link copy
19 : 23

فَاَنْشَاْنَا لَكُمْ بِهٖ جَنّٰتٍ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ ۘ— لَكُمْ فِیْهَا فَوَاكِهُ كَثِیْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۟ۙ

ஆக, பேரீட்சை மரங்கள்; இன்னும், திராட்சை செடிகளினால் உருவான (பல) தோட்டங்களை அதன் மூலம் உங்களுக்காக நாம் உருவாக்கினோம். உங்களுக்கு அதில் (இன்னும் பலவகையான) அதிகமான பழங்களும் உண்டு. இன்னும், அவற்றிலிருந்து (-அந்த கனிவர்க்கங்களிலிருந்து உணவாகவும்) நீங்கள் சாப்பிடுகிறீர்கள். info
التفاسير:

external-link copy
20 : 23

وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُوْرِ سَیْنَآءَ تَنْۢبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْاٰكِلِیْنَ ۟

இன்னும், ஸினாய் மலையிலிருந்து உற்பத்தி ஆகக்கூடிய ஒரு மரத்தை நாம் படைத்தோம். அது எண்ணையையும் (-அதற்குரிய காயையும்) உண்பவர்களுக்கு ஒரு சுவையான உணவையும் முளைப்பிக்கிறது. info
التفاسير:

external-link copy
21 : 23

وَاِنَّ لَكُمْ فِی الْاَنْعَامِ لَعِبْرَةً ؕ— نُسْقِیْكُمْ مِّمَّا فِیْ بُطُوْنِهَا وَلَكُمْ فِیْهَا مَنَافِعُ كَثِیْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۟ۙ

நிச்சயமாக கால்நடையில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிற்றிலிருந்து (வெளிவரக்கூடிய பாலை) உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அதிகமான பலன்களும் உள்ளன. இன்னும் அவற்றிலிருந்து (கிடைக்கும் மாமிசத்தையும்) நீங்கள் புசிக்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
22 : 23

وَعَلَیْهَا وَعَلَی الْفُلْكِ تُحْمَلُوْنَ ۟۠

இன்னும், நீங்கள் அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் சுமக்கப்படுகிறீர்கள். info
التفاسير:

external-link copy
23 : 23

وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— اَفَلَا تَتَّقُوْنَ ۟

திட்டவட்டமாக நூஹை அவருடைய மக்களிடம் நாம் அனுப்பினோம். ஆக, அவர் கூறினார்: எனது மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. நீங்கள் (அவனுடைய தண்டனையை) அஞ்ச வேண்டாமா? info
التفاسير:

external-link copy
24 : 23

فَقَالَ الْمَلَؤُا الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ— یُرِیْدُ اَنْ یَّتَفَضَّلَ عَلَیْكُمْ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَنْزَلَ مَلٰٓىِٕكَةً ۖۚ— مَّا سَمِعْنَا بِهٰذَا فِیْۤ اٰبَآىِٕنَا الْاَوَّلِیْنَ ۟ۚۖ

ஆக, அவருடைய மக்களில் நிராகரித்து கொண்டிருந்த பிரமுகர்கள் கூறினார்கள்: இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர இல்லை. அவர் உங்களைப் பார்க்கிலும் மேன்மை அடைய நாடுகிறார். இன்னும், அல்லாஹ் நாடியிருந்தால் வானவர்க(ளுக்கு தூதுத்துவத்தை கொடுத்து அவர்க)ளை (பூமியில் உங்களுக்கு தூதர்களாக) இறக்கி இருப்பான். இதை, எங்கள் முன்னோர்களான மூதாதைகளில் நாங்கள் கேள்விப்பட்டதில்லை. info
التفاسير:

external-link copy
25 : 23

اِنْ هُوَ اِلَّا رَجُلٌۢ بِهٖ جِنَّةٌ فَتَرَبَّصُوْا بِهٖ حَتّٰی حِیْنٍ ۟

அவர் ஓர் ஆடவரே தவிர (அவர் தூதர்) இல்லை. அவருக்கு பைத்தியம் ஏற்பட்டிருக்கிறது. ஆக, ஒரு காலம் வரை (அவருக்கு என்ன நிகழப்போகிறது என பொறுத்திருந்து) எதிர்பார்த்திருங்கள். info
التفاسير:

external-link copy
26 : 23

قَالَ رَبِّ انْصُرْنِیْ بِمَا كَذَّبُوْنِ ۟

அவர் கூறினார்: என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால் எனக்கு நீ உதவுவாயாக! info
التفاسير:

external-link copy
27 : 23

فَاَوْحَیْنَاۤ اِلَیْهِ اَنِ اصْنَعِ الْفُلْكَ بِاَعْیُنِنَا وَوَحْیِنَا فَاِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُ ۙ— فَاسْلُكْ فِیْهَا مِنْ كُلٍّ زَوْجَیْنِ اثْنَیْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَیْهِ الْقَوْلُ مِنْهُمْ ۚ— وَلَا تُخَاطِبْنِیْ فِی الَّذِیْنَ ظَلَمُوْا ۚ— اِنَّهُمْ مُّغْرَقُوْنَ ۟

ஆக, அவருக்கு நாம் வஹ்யி அறிவித்தோம்: நமது கண்களுக்கு முன்பாகவும் நமது அறிவிப்பின்படியும் நீர் கப்பலை செய்வீராக! ஆக, நமது கட்டளை வந்துவிட்டால்; இன்னும், அடுப்பு பொங்க ஆரம்பித்துவிட்டால் எல்லாவற்றிலிருந்தும் இரண்டு ஜோடிகளையும் உமது குடும்பத்தினரையும் அதில் ஏற்றுவீராக, அவர்களில் எவன் மீது (இறைவனின்) வாக்கு முந்திவிட்டதோ அவனைத் தவிர. (அவனை ஏற்றாதீர்!) இன்னும், அநியாயக்காரர்கள் விஷயத்தில் (அவர்களுக்காக பரிந்து பேசி) என்னிடம் நீர் உரையாடாதீர்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள். info
التفاسير: