ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
73 : 21

وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً یَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَیْنَاۤ اِلَیْهِمْ فِعْلَ الْخَیْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِیْتَآءَ الزَّكٰوةِ ۚ— وَكَانُوْا لَنَا عٰبِدِیْنَ ۟ۙ

இன்னும், நமது கட்டளையின்படி நேர்வழிகாட்டுகின்ற தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம். இன்னும், நன்மைகளை செய்யும்படியும், தொழுகையை நிலை நிறுத்தும்படியும், ஸகாத்தை கொடுக்கும்படியும் நாம் அவர்களுக்கு வஹ்யி அறிவித்தோம். இன்னும், அவர்கள் நம்மை வணங்குபவர்களாக இருந்தார்கள். info
التفاسير:

external-link copy
74 : 21

وَلُوْطًا اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّیْنٰهُ مِنَ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰٓىِٕثَ ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِیْنَ ۟ۙ

இன்னும், லூத்தை நினைவு கூர்வீராக! (மக்களுக்கு மத்தியில்) தீர்ப்பளிக்கின்ற சட்ட ஞானத்தையும் (மார்க்க) கல்வியையும் நாம் அவருக்கு கொடுத்தோம். இன்னும், அசிங்கமான செயல்களை செய்துகொண்டிருந்த ஊரிலிருந்து நாம் அவரை பாதுகாத்தோம். நிச்சயமாக அவர்கள் கெட்ட மக்களாக, பாவிகளாக இருந்தார்கள். info
التفاسير:

external-link copy
75 : 21

وَاَدْخَلْنٰهُ فِیْ رَحْمَتِنَا ؕ— اِنَّهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟۠

இன்னும், அவரை நமது அருளில் நாம் சேர்த்துக் கொண்டோம். நிச்சயமாக அவர் நல்லவர்களில் உள்ளவர் ஆவார். info
التفاسير:

external-link copy
76 : 21

وَنُوْحًا اِذْ نَادٰی مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ

இன்னும் நூஹையும் நினைவு கூர்வீராக! அவர் இதற்கு முன்னர் (நம்மை) அழைத்தபோது, நாம் அவருக்கு பதிலளித்து அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பெரிய தண்டனையிலிருந்து பாதுகாத்தோம். info
التفاسير:

external-link copy
77 : 21

وَنَصَرْنٰهُ مِنَ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِیْنَ ۟

இன்னும், நமது அத்தாட்சிகளை பொய்ப்பித்த மக்களிடமிருந்து (அவரை) நாம் காப்பாற்றி அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் கெட்ட மக்களாக இருந்தனர். ஆகவே, அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம். info
التفاسير:

external-link copy
78 : 21

وَدَاوٗدَ وَسُلَیْمٰنَ اِذْ یَحْكُمٰنِ فِی الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِیْهِ غَنَمُ الْقَوْمِ ۚ— وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِیْنَ ۟ۙ

இன்னும், தாவூதையும் சுலைமானையும் நினைவு கூர்வீராக! அவ்விருவரும் விவசாயத்தின் விளைச்சலில் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக! அதில் (அந்த விளைச்சலில் வேறு) மக்களுடைய ஆடுகள் (இரவில்) நுழைந்த போது (அவை விளைச்சலை மேய்ந்து நாசப்படுத்தி விட்டன). (தாவூது, சுலைமான் மற்றும் அந்தக் கூட்டத்தார் ஆகிய) அவர்களின் தீர்ப்பை நாம் அறிந்தவர்களாக இருந்தோம். info
التفاسير:

external-link copy
79 : 21

فَفَهَّمْنٰهَا سُلَیْمٰنَ ۚ— وَكُلًّا اٰتَیْنَا حُكْمًا وَّعِلْمًا ؗ— وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَ ؕ— وَكُنَّا فٰعِلِیْنَ ۟

ஆக, அ(ந்த பிரச்சினைக்குரிய சட்டத்)தை நாம் சுலைமானுக்கு புரிய வைத்தோம். இன்னும், (நமது தூதர்கள்) எல்லோருக்கும் ஞானத்தையும் (நீதி தொடர்பான சட்டக்) கல்வியையும் நாம் கொடுத்தோம். இன்னும், தாவூதுடன் மலைகளையும் பறவைகளையும் (அவை அவருடன் சேர்ந்து நம்மை) துதிக்கக்கூடியவையாக அடிபணிய வைத்தோம். இன்னும், (இதை விதியில் முன்பே) நாம் முடிவு செய்தவர்களாக இருந்தோம். info
التفاسير:

external-link copy
80 : 21

وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْ بَاْسِكُمْ ۚ— فَهَلْ اَنْتُمْ شٰكِرُوْنَ ۟

உங்களுக்காக கவச ஆடைகள் (இன்னும் ஆயுதங்கள்) செய்வதை நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம். ஏனெனில், உங்கள் போரில் (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) அவை உங்களை பாதுகாக்கும். ஆக, நீங்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவீர்களா? info
التفاسير:

external-link copy
81 : 21

وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ عَاصِفَةً تَجْرِیْ بِاَمْرِهٖۤ اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ— وَكُنَّا بِكُلِّ شَیْءٍ عٰلِمِیْنَ ۟

இன்னும், விரைவாக வீசக்கூடிய காற்றை சுலைமானுக்கு நாம் வசப்படுத்தினோம். அவருடைய கட்டளையின்படி நாம் அருள்புரிந்த பூமிக்கு அது (சுலைமானையும் அவருடைய படையையும் சுமந்து) செல்லும். இன்னும், நாம் எல்லாவற்றையும் அறிந்தவர்களாக இருந்தோம். info
التفاسير: