ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
13 : 20

وَاَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا یُوْحٰی ۟

இன்னும், நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஆகவே, (உமக்கு) வஹ்யி அறிவிக்கப்படுபவற்றை செவிமடுப்பீராக! info
التفاسير:

external-link copy
14 : 20

اِنَّنِیْۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدْنِیْ ۙ— وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِیْ ۟

நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, என்னை வணங்குவீராக! இன்னும், என் நினைவிற்காக தொழுகையை நிலைநிறுத்துவீராக! info
التفاسير:

external-link copy
15 : 20

اِنَّ السَّاعَةَ اٰتِیَةٌ اَكَادُ اُخْفِیْهَا لِتُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا تَسْعٰی ۟

நிச்சயமாக மறுமை (உண்மைதான். அது ஒரு நாள்) வரக்கூடியதாகும், - அதை (யாரும் அறியாதவாறு) நான் மறைத்து வைத்திருப்பேன், - ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்ததற்கு (அங்கு) கூலி கொடுக்கப்படுவதற்காக. info
التفاسير:

external-link copy
16 : 20

فَلَا یَصُدَّنَّكَ عَنْهَا مَنْ لَّا یُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوٰىهُ فَتَرْدٰی ۟

ஆக, அதை நம்பிக்கை கொள்ளாமல், தனது மன இச்சையை பின்பற்றியவன் அதை விட்டு உம்மை (தவறான பாதையின் பக்கம்) திருப்பிவிட வேண்டாம், நீர் அழிந்து விடுவீர். info
التفاسير:

external-link copy
17 : 20

وَمَا تِلْكَ بِیَمِیْنِكَ یٰمُوْسٰی ۟

மூஸாவே! உமது வலக்கையில் உள்ள அது என்ன?” info
التفاسير:

external-link copy
18 : 20

قَالَ هِیَ عَصَایَ ۚ— اَتَوَكَّؤُا عَلَیْهَا وَاَهُشُّ بِهَا عَلٰی غَنَمِیْ وَلِیَ فِیْهَا مَاٰرِبُ اُخْرٰی ۟

அவர் கூறினார்: அது எனது கைத்தடி. அதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இன்னும், அதன் மூலம் என் ஆடுகளுக்கு இலைகளை பறிப்பேன். இன்னும், எனக்கு அதில் மற்ற பல தேவைகளும் உள்ளன. info
التفاسير:

external-link copy
19 : 20

قَالَ اَلْقِهَا یٰمُوْسٰی ۟

அவன் கூறினான்: மூஸாவே! அதை நீர் எறிவீராக! info
التفاسير:

external-link copy
20 : 20

فَاَلْقٰىهَا فَاِذَا هِیَ حَیَّةٌ تَسْعٰی ۟

ஆக, அதை அவர் எறிந்தார். ஆக, அது விரைந்து ஓடுகின்ற ஒரு பாம்பாக ஆகிவிட்டது. info
التفاسير:

external-link copy
21 : 20

قَالَ خُذْهَا وَلَا تَخَفْ ۫— سَنُعِیْدُهَا سِیْرَتَهَا الْاُوْلٰی ۟

அவன் கூறினான்: அதைப் பிடிப்பீராக! பயப்படாதீர். நாம் அதை அதன் முந்திய தன்மைக்கே திருப்புவோம். info
التفاسير:

external-link copy
22 : 20

وَاضْمُمْ یَدَكَ اِلٰی جَنَاحِكَ تَخْرُجْ بَیْضَآءَ مِنْ غَیْرِ سُوْٓءٍ اٰیَةً اُخْرٰی ۟ۙ

இன்னும், உமது கரத்தை புஜத்தின் கீழ் சேர்த்து வைப்பீராக! (பிறகு நீர் அதை எடுக்கும்போது) அது (எவ்வித) நோயுமின்றி (பனிக்கட்டியைப் போன்று) வெண்மையாக வெளியே வரும். இது மற்றுமோர் அத்தாட்சியாகும். info
التفاسير:

external-link copy
23 : 20

لِنُرِیَكَ مِنْ اٰیٰتِنَا الْكُبْرٰی ۟ۚ

(மூஸாவே!) நமது பெரிய அத்தாட்சிகளில் இருந்து உமக்கு நாம் காண்பிப்பதற்காக (இவற்றைக் கொடுத்தோம்). info
التفاسير:

external-link copy
24 : 20

اِذْهَبْ اِلٰی فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰی ۟۠

ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்புமீறி விட்டான். info
التفاسير:

external-link copy
25 : 20

قَالَ رَبِّ اشْرَحْ لِیْ صَدْرِیْ ۟ۙ

அவர் கூறினார்: என் இறைவா! எனக்கு என் நெஞ்சை விரிவாக்கு! info
التفاسير:

external-link copy
26 : 20

وَیَسِّرْ لِیْۤ اَمْرِیْ ۟ۙ

இன்னும், என் காரியத்தை எனக்கு இலகுவாக்கு! info
التفاسير:

external-link copy
27 : 20

وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۟ۙ

இன்னும், கொன்னலை என் நாவிலிருந்து அவிழ்த்துவிடு!* info

*(நான் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் பேசமுடியாமல் இருக்கும் இயலாமையை போக்கிவிடு!)

التفاسير:

external-link copy
28 : 20

یَفْقَهُوْا قَوْلِیْ ۪۟

அவர்கள் என் பேச்சை (தெளிவாக) புரிந்து கொள்வார்கள். info
التفاسير:

external-link copy
29 : 20

وَاجْعَلْ لِّیْ وَزِیْرًا مِّنْ اَهْلِیْ ۟ۙ

இன்னும், என் குடும்பத்திலிருந்து எனக்கு ஓர் உதவியாளரை ஏற்படுத்து! info
التفاسير:

external-link copy
30 : 20

هٰرُوْنَ اَخِی ۟ۙ

என் சகோதரர் ஹாரூனை (எனக்கு உதவியாளராக ஆக்கி வை)! info
التفاسير:

external-link copy
31 : 20

اشْدُدْ بِهٖۤ اَزْرِیْ ۟ۙ

அவர் மூலம் எனது முதுகைப் பலப்படுத்து! info
التفاسير:

external-link copy
32 : 20

وَاَشْرِكْهُ فِیْۤ اَمْرِیْ ۟ۙ

இன்னும், எனது (நபித்துவப்) பணியில் அவரை (என்னுடன்) இணைத்துவிடு! info
التفاسير:

external-link copy
33 : 20

كَیْ نُسَبِّحَكَ كَثِیْرًا ۟ۙ

நாங்கள் உன்னை அதிகம் துதிப்பதற்காக, info
التفاسير:

external-link copy
34 : 20

وَّنَذْكُرَكَ كَثِیْرًا ۟ؕ

இன்னும், நாங்கள் உன்னை அதிகம் நினைவு கூர்வதற்காக (என் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்!). info
التفاسير:

external-link copy
35 : 20

اِنَّكَ كُنْتَ بِنَا بَصِیْرًا ۟

நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கின்றாய். info
التفاسير:

external-link copy
36 : 20

قَالَ قَدْ اُوْتِیْتَ سُؤْلَكَ یٰمُوْسٰی ۟

அவன் கூறினான்: “மூஸாவே! உமது கோரிக்கையை நீர் கொடுக்கப்பட்டீர்.” info
التفاسير:

external-link copy
37 : 20

وَلَقَدْ مَنَنَّا عَلَیْكَ مَرَّةً اُخْرٰۤی ۟ۙ

இன்னும், உம்மீது (இது அல்லாத) வேறு ஒரு முறையும் திட்டமாக நான் அருள் புரிந்திருந்தேன், info
التفاسير: