ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
260 : 2

وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِیْ كَیْفَ تُحْیِ الْمَوْتٰی ؕ— قَالَ اَوَلَمْ تُؤْمِنْ ؕ— قَالَ بَلٰی وَلٰكِنْ لِّیَطْمَىِٕنَّ قَلْبِیْ ؕ— قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّیْرِ فَصُرْهُنَّ اِلَیْكَ ثُمَّ اجْعَلْ عَلٰی كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ یَاْتِیْنَكَ سَعْیًا ؕ— وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠

இன்னும், இப்ராஹீம் “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்பதை நீ எனக்குக் காண்பிப்பாயாக!’’ எனக் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “(இப்ராஹீமே!) நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?’’ எனக் கூறினான். (அல்லாஹ்வே!) அவ்வாறில்லை. “(நான் நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்.) எனினும், எனது உள்ளம் நிம்மதி பெறுவதற்காக (அதைக் காண்பிக்கும்படி உன்னிடம் வேண்டுகிறேன்)’’ எனக் கூறினார். பறவைகளில் நான்கைப் பிடித்து, அவற்றை உம்முடன் பழக்குவீராக! பிறகு (அவற்றைப் பல துண்டுகளாக்கி உம்மை சுற்றி உள்ள மலைகளில்) ஒவ்வொரு மலையின் மீதும் அவற்றிலிருந்து ஒரு பகுதியை ஆக்குவீராக! பிறகு, அவற்றை அழைப்பீராக! அவை (உயிர் பெற்று) உம்மிடம் விரைந்து வரும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்வீராக!” என்று (அல்லாஹ்) கூறினான். info
التفاسير: