ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
102 : 2

وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّیٰطِیْنُ عَلٰی مُلْكِ سُلَیْمٰنَ ۚ— وَمَا كَفَرَ سُلَیْمٰنُ وَلٰكِنَّ الشَّیٰطِیْنَ كَفَرُوْا یُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ ۗ— وَمَاۤ اُنْزِلَ عَلَی الْمَلَكَیْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ ؕ— وَمَا یُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰی یَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ؕ— فَیَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا یُفَرِّقُوْنَ بِهٖ بَیْنَ الْمَرْءِ وَزَوْجِهٖ ؕ— وَمَا هُمْ بِضَآرِّیْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَیَتَعَلَّمُوْنَ مَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ ؕ— وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰىهُ مَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۫ؕ— وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ ؕ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟

இன்னும், (யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். ஸுலைமான் நிராகரிக்கவில்லை. எனினும் ஷைத்தான்கள்தான் நிராகரித்தார்கள். (அவர்கள்) மனிதர்களுக்கு சூனியத்தையும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் (என்ற இரு) வானவர்களுக்கு இறக்கப்பட்ட (மந்திரத்)தையும் கற்றுக்கொடுத்தார்கள். அவ்விருவானவர்களோ, “நாங்களெல்லாம் ஒரு சோதனையாவோம். ஆகவே. (இதைக் கற்று) நீ நிராகரிக்காதே!” என்று கூறும் வரை (அதை) (யார்) ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. ஆக, அவர்கள் ஆணுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் எதன் மூலம் பிரிவினை உண்டாக்குவார்களோ அதை அவ்விரு(வான)வரிடமிருந்து கற்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அதன் மூலம் அவர்கள் (யார்) ஒருவருக்கும் தீங்கிழைப்பவர்களாக இல்லை. இன்னும், அவர்களுக்குப் பலனளிக்காததை, அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடிய (மந்திரத்)தை அவர்கள் கற்கிறார்கள். இன்னும், அதை எவர் விலைக்கு வாங்கினாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை என்பதை திட்டவட்டமாக (அவர்கள்) அறிந்திருந்தார்கள். அவர்கள் தங்களை எதற்கு பகரமாக விற்றார்களோ அது திட்டமாக கெட்டதாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! info
التفاسير: