ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
21 : 18

وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَیْهِمْ لِیَعْلَمُوْۤا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَیْبَ فِیْهَا ۚۗ— اِذْ یَتَنَازَعُوْنَ بَیْنَهُمْ اَمْرَهُمْ فَقَالُوا ابْنُوْا عَلَیْهِمْ بُنْیَانًا ؕ— رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ ؕ— قَالَ الَّذِیْنَ غَلَبُوْا عَلٰۤی اَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَیْهِمْ مَّسْجِدًا ۟

அவர்கள் தங்களது (மறுமை) விஷயத்தில் தங்களுக்கிடையில் தர்க்கித்த போது, நிச்சயம் அல்லாஹ்வின் வாக்கு உண்மையாகும்; இன்னும், நிச்சயம் மறுமை - அ(து நிகழ்வ)தில் அறவே சந்தேகம் இல்லை என்று அவர்கள் அறிவதற்காக (அக்குகைவாசிகளை எழுப்பிய) அவ்வாறே, அவர்களை (அந்த ஊர் மக்களுக்கு) காண்பித்து கொடுத்தோம். ஆக, அவர்களுக்கருகில் ஒரு கட்டடத்தை எழுப்புங்கள், அவர்களின் இறைவன் அவர்களை மிக அறிந்தவன் என்று (அந்த ஊர் மக்கள்) கூறினார்கள். அவர்களின் விஷயத்தில் மிகைத்தவர்கள் கூறினார்கள்: “நிச்சயம் அவர்களுக்கருகில் ஒரு தொழுமிடத்தை (மஸ்ஜிதை) நாம் ஏற்படுத்துவோம்.” info
التفاسير:

external-link copy
22 : 18

سَیَقُوْلُوْنَ ثَلٰثَةٌ رَّابِعُهُمْ كَلْبُهُمْ ۚ— وَیَقُوْلُوْنَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًا بِالْغَیْبِ ۚ— وَیَقُوْلُوْنَ سَبْعَةٌ وَّثَامِنُهُمْ كَلْبُهُمْ ؕ— قُلْ رَّبِّیْۤ اَعْلَمُ بِعِدَّتِهِمْ مَّا یَعْلَمُهُمْ اِلَّا قَلِیْلٌ ۫۬— فَلَا تُمَارِ فِیْهِمْ اِلَّا مِرَآءً ظَاهِرًا ۪— وَّلَا تَسْتَفْتِ فِیْهِمْ مِّنْهُمْ اَحَدًا ۟۠

“(அக்குகைவாசிகள்) மூவர் (இருந்தனர்), அவர்களில் நான்காவதாக அவர்களின் நாய் இருந்தது” என்று (பிற்காலத்தில் சிலர்) கூறுகிறார்கள். இன்னும், (சிலர்) கூறுகிறார்கள்: “(அவர்கள்) ஐவர் (இருந்தனர்), அவர்களில் ஆறாவதாக அவர்களின் நாய் இருந்தது” என்று” (இந்த இரு வகையான கூற்றுகளும்) மறைவான அறிவைப்பற்றி கண்மூடித்தனமாக பேச்சாகும். (சிலர்) கூறுகிறார்கள்: “(அவர்கள்) ஏழு நபர்கள். இன்னும் அவர்களில் எட்டாவதாக அவர்களின் நாய் இருந்தது. (நபியே!) கூறுவீராக! “என் இறைவன் அவர்களின் எண்ணிக்கையை மிக அறிந்தவன். குறைவானவர்களைத் தவிர அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்.” ஆகவே, அவர்களைப் பற்றி வெளிப்படையான விவாதமாகவே தவிர (இவர்களிடம்) விவாதிக்காதீர். இன்னும், இவர்களில் ஒருவரிடமும் அவர்களைப் பற்றி விளக்கம் (எதுவும்) கேட்காதீர். info
التفاسير:

external-link copy
23 : 18

وَلَا تَقُوْلَنَّ لِشَایْءٍ اِنِّیْ فَاعِلٌ ذٰلِكَ غَدًا ۟ۙ

(நபியே!) ஒரு காரியத்தைப் பற்றி, நிச்சயம் நான் நாளை அதை செய்பவன் என்று அறவே கூறாதீர்! info
التفاسير:

external-link copy
24 : 18

اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؗ— وَاذْكُرْ رَّبَّكَ اِذَا نَسِیْتَ وَقُلْ عَسٰۤی اَنْ یَّهْدِیَنِ رَبِّیْ لِاَقْرَبَ مِنْ هٰذَا رَشَدًا ۟

அல்லாஹ் நாடினால் தவிர (என்று). இன்னும், நீர் மறந்து விட்டால் (பிறகு நினைவு வந்தவுடன்) உம் இறைவனை நினைவு கூர்வீராக! இன்னும், என் இறைவன் இதைவிட மிக சரியான அறிவிற்கு மிக நெருக்கமானதன் பக்கம் எனக்கு அவன் நேர்வழி காட்டக்கூடும் என்று (அவன் மீது நம்பிக்கை வைத்து) கூறுவீராக! info
التفاسير:

external-link copy
25 : 18

وَلَبِثُوْا فِیْ كَهْفِهِمْ ثَلٰثَ مِائَةٍ سِنِیْنَ وَازْدَادُوْا تِسْعًا ۟

மேலும், (அவர்கள்) தங்கள் குகையில் முன்னூறு ஆண்டுகள் (உறங்கியவர்களாக) தங்கினர். இன்னும், (சிலர் அவர்கள் தங்கிய கால அளவில்) ஒன்பது ஆண்டுகளை அதிகப்படுத்தி (கூறுகின்ற)னர். info
التفاسير:

external-link copy
26 : 18

قُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا لَبِثُوْا ۚ— لَهٗ غَیْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اَبْصِرْ بِهٖ وَاَسْمِعْ ؕ— مَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِیٍّ ؗ— وَّلَا یُشْرِكُ فِیْ حُكْمِهٖۤ اَحَدًا ۟

(நபியே!) கூறுவீராக! (இன்று வரை) அவர்கள் தங்கிய(மொத்த காலத்)தை அல்லாஹ் (ஒருவன்)தான் மிக அறிந்தவன். வானங்கள் இன்னும் பூமியில் உள்ள மறைவானவை (-அவற்றைப் பற்றிய அறிவு) அவனுக்கே உரியன. அவன் துல்லியமாகப் பார்ப்பவன், இன்னும் துல்லியமாகக் கேட்பவன். அவர்களுக்கு அவனையன்றி பாதுகாவலன் ஒருவனும் இல்லை. இன்னும், அவன் தனது அதிகாரத்தில் எவ(ர் ஒருவ)ரையும் கூட்டாக்க மாட்டான். info
التفاسير:

external-link copy
27 : 18

وَاتْلُ مَاۤ اُوْحِیَ اِلَیْكَ مِنْ كِتَابِ رَبِّكَ ؕ— لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ ۫ۚ— وَلَنْ تَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۟

(நபியே! ஒவ்வொரு நாளும்) உம் இறைவனின் வேதத்தில் உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை ஓதுவீராக! (அதன்படி செயல்படுவீராக!) அவனுடைய வாக்கியங்களை மாற்றுபவர் அறவே இல்லை. இன்னும், அவனையன்றி அடைக்கலம் பெறுமிடத்தை காணவே மாட்டீர் info
التفاسير: