ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
7 : 16

وَتَحْمِلُ اَثْقَالَكُمْ اِلٰی بَلَدٍ لَّمْ تَكُوْنُوْا بٰلِغِیْهِ اِلَّا بِشِقِّ الْاَنْفُسِ ؕ— اِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟ۙ

மிகுந்த சிரமத்துடனே தவிர நீங்கள் சென்று அடைய முடியாத ஊருக்கு அவை (உங்களையும்) உங்கள் சுமைகளையும் சுமக்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் பெரும் இரக்கமுள்ளவன், மகா கருணையாளன். info
التفاسير:

external-link copy
8 : 16

وَّالْخَیْلَ وَالْبِغَالَ وَالْحَمِیْرَ لِتَرْكَبُوْهَا وَزِیْنَةً ؕ— وَیَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ ۟

குதிரைகளை, கோவேறு கழுதைகளை, கழுதைகளை, அவற்றில் நீங்கள் வாகணிப்பதற்காகவும் (அவை உங்களுக்கு) அலங்காரமாக இருப்பதற்காகவும் (அல்லாஹ் படைத்தான்). இன்னும், நீங்கள் அறியாத (பல)வற்றை (அவன் உங்களுக்காக) படைப்பான். info
التفاسير:

external-link copy
9 : 16

وَعَلَی اللّٰهِ قَصْدُ السَّبِیْلِ وَمِنْهَا جَآىِٕرٌ ؕ— وَلَوْ شَآءَ لَهَدٰىكُمْ اَجْمَعِیْنَ ۟۠

நேர்வழி(யை தெளிவுபடுத்துவது) அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேலும், வழிகளில் (சில) கோணலானதும் இருக்கிறது. இன்னும், அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேர்வழி நடத்தி இருப்பான். info
التفاسير:

external-link copy
10 : 16

هُوَ الَّذِیْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً لَّكُمْ مِّنْهُ شَرَابٌ وَّمِنْهُ شَجَرٌ فِیْهِ تُسِیْمُوْنَ ۟

அவன் மேகத்திலிருந்து மழை நீரை இறக்குகிறான். அதில் உங்களுக்கு குடிநீர் இருக்கிறது. இன்னும், அதிலிருந்து மரங்கள் (செடி கொடிகள், புற்பூண்டுகள்) முளைக்கின்றன. அவற்றில் (உங்கள் கால்நடைகளை) நீங்கள் மேய்க்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
11 : 16

یُنْۢبِتُ لَكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّیْتُوْنَ وَالنَّخِیْلَ وَالْاَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

அதன் மூலம் பயிர்களையும், ஆலிவ் மரத்தையும், பேரீச்சை மரங்களையும், திராட்சைகளையும் இன்னும், எல்லா கனிவர்க்கங்களையும் அவன் உங்களுக்காக முளைக்க வைக்கிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. info
التفاسير:

external-link copy
12 : 16

وَسَخَّرَ لَكُمُ الَّیْلَ وَالنَّهَارَ ۙ— وَالشَّمْسَ وَالْقَمَرَ ؕ— وَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌ بِاَمْرِهٖ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟ۙ

இன்னும், அவன் இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்தினான். மேலும், நட்சத்திரங்களும் அவனுடைய கட்டளையினால் (உங்களுக்கு) வசப்படுத்தப்பட்டவையாகும். சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
13 : 16

وَمَا ذَرَاَ لَكُمْ فِی الْاَرْضِ مُخْتَلِفًا اَلْوَانُهٗ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّذَّكَّرُوْنَ ۟

இன்னும், பூமியில் உங்களுக்காக மாறுபட்ட நிறங்களுடன் எவற்றை படைத்தானோ அவற்றையும் உங்களுக்காக வசப்படுத்தினான். நல்லுபதேசம் பெறுகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. info
التفاسير:

external-link copy
14 : 16

وَهُوَ الَّذِیْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِیًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْیَةً تَلْبَسُوْنَهَا ۚ— وَتَرَی الْفُلْكَ مَوَاخِرَ فِیْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

இன்னும், கடலிலிருந்து பசுமையான (மென்மையான) மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காகவும்; இன்னும், நீங்கள் அணிகிற ஆபரணங்களை அதிலிருந்து நீங்கள் வெளியெடுப்பதற்காகவும்; இன்னும், அவனுடைய அருளை நீங்கள் தேடி பயணிப்பதற்காகவும்; இன்னும், (இவற்றை எல்லாம் பெற்றதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (உங்களுக்கு) கடலை வசப்படுத்தி கொடுத்தான். இன்னும், அதில் கப்பல்களை – (அலைகளை) பிளந்து செல்பவையாக நீர் பார்க்கிறீர். info
التفاسير: