ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

external-link copy
128 : 7

قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اسْتَعِیْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا ۚ— اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ۫— یُوْرِثُهَا مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ— وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟

7.128. மூஸா தம் சமூகத்தாருக்கு அறிவுரை வழங்கியவராகக் கூறினார்: “என் சமூகமே! உங்களை விட்டு தீங்கை அகற்றி நன்மையைக் கொண்டுவர அல்லாஹ்விடமே உதவிதேடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையில் பொறுமையாக இருங்கள். பூமி அல்லாஹ்வுக்கே சொந்தமானது. பிர்அவ்ன் தான் நினைத்தவாறு அதில் இயங்க அதுவொன்றும் அனுக்கோ ஏனையோருக்கோ சொந்தமானதல்ல. அல்லாஹ் மக்களிடையே தன் நாட்டப்படி மாறிமாறி வழங்குகிறான். ஆனால் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கும் நம்பிக்கையாளர்களுக்கு பூமியில் நல்ல முடிவு காத்திருக்கின்றது. அவர்கள் சோதனைகளாலும் கஷ்டங்களாலும் பாதிக்கப்பட்டாலும் பூமி அவர்களுக்குச் சொந்தமானதே.” info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• موقف السّحرة وإعلان إيمانهم بجرأة وصراحة يدلّ على أنّ الإنسان إذا تجرّد عن هواه، وأذعن للعقل والفكر السّليم بادر إلى الإيمان عند ظهور الأدلّة عليه.
1. சூனியக்காரர்களின் நிலைப்பாடும், தமது நம்பிக்கையை துணிவுடனும் தெளிவாகவும் அறிவித்தமையும், மனிதன் தன் மனஇச்சையிலிருந்து நீங்கி ஆரோக்கியமான பகுத்தறிவுக்கும் சிந்தனைக்கும் கட்டுப்பட்டால், ஆதாரங்கள் தௌிவாகும் போது அவன் ஈமானின் பக்கமே விரைவான் என்பதைக் காட்டுகிறது. info

• أهل الإيمان بالله واليوم الآخر هم أشدّ الناس حزمًا، وأكثرهم شجاعة وصبرًا في أوقات الأزمات والمحن والحروب.
2. அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களே, நெருக்கடிகள், சோதனைகள், யுத்த காலகட்டங்களின் போது மக்களில் மிக உறுதியானவர்களாகவும் தைரியமானவர்களாவும், பொறுமையாளர்களாகவும் இருப்பார்கள். info

• المنتفعون من السّلطة يُحرِّضون ويُهيِّجون السلطان لمواجهة أهل الإيمان؛ لأن في بقاء السلطان بقاء لمصالحهم.
3. அதிகாரத்திலிருந்து பயனடைபவர்கள் அரசனை நம்பிக்கையாளர்களுக்கு எதிராகத் தூண்டுகிறார்கள். ஏனெனில் அரசன் நிலைத்திருப்பதில்தான் அவர்களின் நலன்கள் உள்ளன. info

• من أسباب حبس الأمطار وغلاء الأسعار: الظلم والفساد.
4. அநியாயமும் குழப்பமும் மழையைத் தடுக்கும், விலையை அதிகரிக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கின்றது. info