ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

external-link copy
29 : 67

قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَیْهِ تَوَكَّلْنَا ۚ— فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

67.29. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “உங்களைத் தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று அழைப்பவன் அளவிலாக் கருணையாளன். நாங்கள் அவன் மீதே நம்பிக்கைகொண்டோம். எங்களின் எல்லா விவகாரங்களிலும் நாங்கள் அவனை மட்டுமே சார்ந்துள்ளோம். நிச்சயமாக நீங்கள் யார் நேரான வழியில் யார் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றார்கள் என்பதை விரைவில் -சந்தேகம் இல்லாமல்-அறிந்துகொள்வீர்கள். info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• اتصاف الرسول صلى الله عليه وسلم بأخلاق القرآن.
1. நபியவர்கள் குர்ஆன் கூறும் பண்புகளைப் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். info

• صفات الكفار صفات ذميمة يجب على المؤمن الابتعاد عنها، وعن طاعة أهلها.
2. நிராகரிப்பாளர்களின் பண்புகள் மோசமான பண்புகளாகும். அவற்றை விட்டும் அவர்களை வழிப்படுவதை விட்டும் விலகியிருப்பது நம்பிக்கையாளனின்மீது கட்டாயமாகும். info

• من أكثر الحلف هان على الرحمن، ونزلت مرتبته عند الناس.
3. அதிகமாக சத்தியம் செய்பவன் இறைவனிடம் தாழ்ந்துவிடுவதோடு மனிதர்களிடமும் அவனது மதிப்புக் குறைந்துவிடுகிறது. info