ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

external-link copy
37 : 43

وَاِنَّهُمْ لَیَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِیْلِ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ۟

43.37. குர்ஆனைப் புறக்கணிப்பவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள உடனிருக்கும் இந்த ஷைத்தான்கள் திட்டமாக அவர்களை அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுக்கிறார்கள். அவர்கள் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்துவதில்லை. அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருப்பதில்லை. இருந்தும் நிச்சயமாக தாங்கள் சத்தியத்தின்பால் நேர்வழிகாட்டப்படுவதாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் தங்களின் வழிகேட்டிலிருந்து பாவமன்னிப்புக் கோரி மீளுவதுமில்லை. info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• خطر الإعراض عن القرآن.
1. குர்ஆனைப் புறக்கணிப்பதன் விபரீதம். info

• القرآن شرف لرسول الله صلى الله عليه وسلم ولأمته.
2. குர்ஆன் நபியவர்களுக்கும் அவர்களின் சமூகத்திற்கும் கண்ணியமாகும். info

• اتفاق الرسالات كلها على نبذ الشرك.
3. அனைத்து தூதுகளும் இணைவைப்பை எதிர்ப்பதில் ஒற்றுமைப்பட்டுள்ளது. info

• السخرية من الحق صفة من صفات الكفر.
4. சத்தியத்தைப் பரிகாசம்செய்வது நிராகரிப்பின் பண்புகளில் ஒன்றாகும். info