ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

external-link copy
71 : 39

وَسِیْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ زُمَرًا ؕ— حَتّٰۤی اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَتْلُوْنَ عَلَیْكُمْ اٰیٰتِ رَبِّكُمْ وَیُنْذِرُوْنَكُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ؕ— قَالُوْا بَلٰی وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَی الْكٰفِرِیْنَ ۟

39.71. வானவர்கள் அல்லாஹ்வை நிராகரித்தவர்களை இழிவடைந்த நிலையில் கூட்டம் கூட்டமாக நரகத்தில் இழுத்து வருவார்கள். அவர்கள் நரகத்தின் அருகில் வந்தவுடன் அவர்களுக்காக நரகத்துக்கு பொறுப்பாக்கப்பட்ட வானவ காவலர்கள் அதன் வாயில்களைத் திறப்பார்கள். வானவர்கள் அவர்களிடம் கண்டிக்கும் தோரணையில் கேட்பார்கள்: “உங்கள் இனத்திலிருந்தே தமக்கு இறக்கப்பட்ட உங்கள் இறைவனின் வசனங்களை எடுத்துரைத்து, கடுமையான வேதனையுடைய மறுமையின் சந்திப்பைக் குறித்து உங்களுக்கு எச்சரிக்கும் தூதர்கள் உங்களிடம் வரவில்லையா?” நிராகரிப்பாளர்கள் தங்களுக்கு எதிராக ஒத்துக் கொண்டவர்களாக கூறுவார்கள்: “ஆம். அவை அனைத்தும் இடம்பெற்றன. ஆயினும் நிராகரிப்பாளர்களின் மீது வேதனையின் வாக்கு உறுதியாகிவிட்டது. நாங்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தோம். info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• ثبوت نفختي الصور.
இரு முறை ஸுர் ஊதப்படும் என்பது நிரூபிக்கப்படல் info

• بيان الإهانة التي يتلقاها الكفار، والإكرام الذي يُسْتَقبل به المؤمنون.
2. நிராகரிப்பாளர்கள் எதிர்நோக்கும் அவமானத்தையும் நம்பிக்கையாளர்கள் எதிர்நோக்கும் மரியாதையையும் தெளிவுபடுத்தல். info

• ثبوت خلود الكفار في الجحيم، وخلود المؤمنين في النعيم.
3. நிராகரிப்பாளர்கள் நரத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். நம்பிக்கையாளர்கள் இன்பங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள் என்பது உறுதியாகிறது. info

• طيب العمل يورث طيب الجزاء.
4. நற்செயல் நற்கூலியைப் பெற்றுத் தருகிறது. info