ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

external-link copy
45 : 34

وَكَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۙ— وَمَا بَلَغُوْا مِعْشَارَ مَاۤ اٰتَیْنٰهُمْ فَكَذَّبُوْا رُسُلِیْ ۫— فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟۠

34.45. ஆத், ஸமூத், லூதுடைய சமூகம் போன்ற முந்தைய சமூகங்களும் பொய்ப்பித்தன. உம் சமூகத்திலுள்ள இணைவைப்பாளர்கள் முந்தைய சமூகங்கள் பெற்றிருந்த, செல்வம், அருட்கொடை, பலம், எண்ணிக்கை ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைக்கூட பெறவில்லை. அவர்களில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களின் தூதரை பொய்ப்பித்தார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட செல்வமோ, பலமோ, எண்ணிக்கையோ அவர்களுக்குப் பலனளிக்கவில்லை. என் வேதனை அவர்களைத் தாக்கியது. -தூதரே!- நான் அவர்களுக்கு அளித்த மறுப்பும் தண்டனையும் எவ்வாறு இருந்தது என்பதைப் பார்ப்பீராக.
info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• التقليد الأعمى للآباء صارف عن الهداية.
1. முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது நேர்வழியைவிட்டுத் திருப்பக்கூடியதாகும். info

• التفكُّر مع التجرد من الهوى وسيلة للوصول إلى القرار الصحيح، والفكر الصائب.
2.மனஇச்சையிலிருந்து நீங்கி சிந்தனை செய்வது சரியான தீர்மானம் மற்றும் சரியான சிந்தனைக்கான ஒரு வழியாகும். info

• الداعية إلى الله لا ينتظر الأجر من الناس، وإنما ينتظره من رب الناس.
3. அல்லாஹ்வின்பால் அழைக்கும் அழைப்பாளன் மக்களிடம் கூலியை எதிர்பார்க்கமாட்டான். நிச்சயமாக மனிதர்களின் இறைவனிடமே அதனை எதிர்பார்ப்பான். info