ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

external-link copy
26 : 32

اَوَلَمْ یَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنَ الْقُرُوْنِ یَمْشُوْنَ فِیْ مَسٰكِنِهِمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ ؕ— اَفَلَا یَسْمَعُوْنَ ۟

32.26. நாம் இவர்களுக்கு முன்னால் எத்தனையோ சமூகங்களை அழித்துள்ளோம் என்பது இவர்களுக்குத் தெளிவாகவில்லையா? இவர்கள் குருடாகி விட்டார்களா என்ன? இவர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களின் வழியேதான் கடந்து செல்கிறார்கள். அவர்களது நிலமையைக்கொண்டு இவர்கள் படிப்பினை பெறவில்லையா? நிச்சயமாக அந்தச் சமூகங்களுக்கு அவர்களின் நிராகரிப்பினாலும் பாவங்களினாலும் நிகழ்ந்த அழிவில், அவர்களிடம் வந்த இறைத் தூதர்கள் உண்மையாளர்களே என்பதைத் தெரிவிக்கும் படிப்பினைகள் இருக்கின்றன. அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிக்கும் இவர்கள் ஏற்றுக்கொண்டு அறிவுரை பெறும் நோக்கில் செவியேற்கமாட்டார்களா என்ன? info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• عذاب الكافر في الدنيا وسيلة لتوبته.
1. நிராகரிப்பாளனுக்கு உலகில் வழங்கப்படும் தண்டனை பாவமன்னிப்புக் கோருவதற்கு அவனுக்கு வழங்கப்படும் வாய்ப்பாகும். info

• ثبوت اللقاء بين نبينا صلى الله عليه وسلم وموسى عليه السلام ليلة الإسراء والمعراج.
2. நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் மூஸா(அலை) அவர்களுக்கும் மத்தியில் இஸ்ரா, மிஃராஜ் உடைய இரவில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பது உறுதியாகிறது. info

• الصبر واليقين صفتا أهل الإمامة في الدين.
3. பொறுமையும் உறுதியான நம்பிக்கையும் மார்க்கத் தலைமைகளின் இரு பண்புகளாகும். info