ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

external-link copy
24 : 29

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا اقْتُلُوْهُ اَوْ حَرِّقُوْهُ فَاَنْجٰىهُ اللّٰهُ مِنَ النَّارِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟

29.24. இப்ராஹீம் தனது சமூகத்தை அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி ஏனைய தெய்வங்களை வணங்குவதை விட்டுவிடும் படி ஏவியதற்கு அவரது சமூகம் அளித்த பதில் இதுதான்: “உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவரைக் கொன்றுவிடுங்கள் அல்லது நெருப்பில் போட்டுவிடுங்கள்.” அல்லாஹ் நெருப்பிலிருந்து அவரைப் பாதுகாத்தான். அவர்கள் நெருப்பில் போட்ட பிறகும் அல்லாஹ் அவரைக் காப்பாற்றியதில், நம்பிக்கைகொள்ளும் மக்களுக்குப் படிப்பினைகள் இருக்கின்றன. ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் படிப்பினைகளைக் கொண்டு பயனடைவார்கள். info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• عناية الله بعباده الصالحين حيث ينجيهم من مكر أعدائهم.
1. அல்லாஹ் தன் நல்லடியார்களின் மீது கொண்ட அக்கறையினால் அவன் அவர்களை எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்கிறான். info

• فضل الهجرة إلى الله.
2. அல்லாஹ்வின்பால் புலம்பெயர்ந்து செல்வதன் சிறப்பு தெளிவாகிறது. info

• عظم منزلة إبراهيم وآله عند الله تعالى.
3. இப்ராஹீமும் அவரது குடும்பத்தினரும் அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளார்கள். info

• تعجيل بعض الأجر في الدنيا لا يعني نقص الثواب في الآخرة.
4. உலகில் சில நன்மைகள் அவசரமாகக் கிடைப்பதன் கருத்து மறுமையில் நன்மை குறையும் என்பதல்ல. info

• قبح تعاطي المنكرات في المجالس العامة.
5. பொதுச் சபைகளில் மானக் கேடான செயல்களில் ஈடுபடுவது மோசமானதாகும். info