ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

external-link copy
25 : 28

فَجَآءَتْهُ اِحْدٰىهُمَا تَمْشِیْ عَلَی اسْتِحْیَآءٍ ؗ— قَالَتْ اِنَّ اَبِیْ یَدْعُوْكَ لِیَجْزِیَكَ اَجْرَ مَا سَقَیْتَ لَنَا ؕ— فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَیْهِ الْقَصَصَ ۙ— قَالَ لَا تَخَفْ ۫— نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟

28.25. அவர்கள் இருவரும் சென்று தங்களின் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார்கள். அவர் அவர்களில் ஒருத்தியைமூஸாவை அழைத்து வருமாறு அனுப்பினார். அவள் வெட்கத்தோடு வந்து மூஸாவிடம் கூறினாள்: “நிச்சயமாக நீர் எங்களின் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டியதற்குக் கூலி வழங்குவதற்காக என் தந்தை உங்களை அழைக்கின்றார்.” மூஸா அந்தப் பெண்களின் தந்தையிடம் வந்தபோது நடந்த எல்லா சம்பவங்களையும் கூறினார். அதற்கு அவர் அவரை அமைதிப்படுத்தி கூறினார்: “பயப்படாதீர். நீர் அநியாயக்கார மக்களான ஃபிர்அவ்னிடமிருந்து அவனுடைய சமூகத்தினரிடமிருந்தும் தப்பிவிட்டீர். ஏனெனில் மத்யன் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. இங்கு அவர்களால் உமக்குத் தீங்கிழைக்க முடியாது.” info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• الالتجاء إلى الله طريق النجاة في الدنيا والآخرة.
1. அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவது இவ்வுலகிலும் மறுவுலகிலும் தப்புவதற்கான வழியாகும். info

• حياء المرأة المسلمة سبب كرامتها وعلو شأنها.
2.முஸ்லிமான பெண்ணின் நாணமே அவளின் கண்ணியத்திற்கும் உயர்வுக்கும் காரணம் ஆகும். info

• مشاركة المرأة بالرأي، واعتماد رأيها إن كان صوابًا أمر محمود.
3. அபிப்பிராயத்தில் பெண்ணும் கலந்துகொண்டு, அவளது ஆலோசனை சரியானதாக இருந்தால் அதன்படி செயல்படுவது புகழத்தக்க விடயமாகும். info

• القوة والأمانة صفتا المسؤول الناجح.
4. பலமும் அமானிதமும் வெற்றிகரமான பொறுப்பாளனின் இரு பண்புகளாகும். info

• جواز أن يكون المهر منفعة.
5. மணக்கொடை பயனாகவும் இருக்கலாம். info