ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

அந்நம்ல்

គោល​បំណងនៃជំពូក:
الامتنان على النبي صلى الله عليه وسلم بنعمة القرآن وشكرها والصبر على تبليغه.
அல்குர்ஆனை அருளியமை அதற்கு நன்றிசெலுத்தி அதனை எடுத்துரைப்பதற்கான பொறுமை ஆகிய பாக்கியங்களை அருளாக வழங்கியதை நபியவர்களுக்கு எடுத்துக்கூறுதல் info

external-link copy
1 : 27

طٰسٓ ۫— تِلْكَ اٰیٰتُ الْقُرْاٰنِ وَكِتَابٍ مُّبِیْنٍ ۟ۙ

27.1. பார்க்க, அல்பகரா அத்தியாயத்தின் ஆரம்ப வசனம். உம்மீது இறக்கப்பட்ட இந்த வசனங்கள் சந்தேகமற்ற, தெளிவான குர்ஆனின் வசனங்களாகும். இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்ப்பவர் அது நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து இறங்கியதுதான் என்பதை அறிந்துகொள்வார். info
التفاسير:

external-link copy
2 : 27

هُدًی وَّبُشْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟ۙ

27.2. இந்த வசனங்கள் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியவையாகவும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டோருக்கு நற்செய்தியாகவும் இருக்கின்றது. info
التفاسير:

external-link copy
3 : 27

الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ ۟

27.3. அவர்கள் தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள்; தங்களின் செல்வங்களிலிருந்து உரியவர்களுக்கு ஸகாத்தை வழங்குகிறார்கள்; மறுமை நாளில் வழங்கப்படும் கூலியிலும் தண்டனையிலும் உறுதியான நம்பிக்கைகொண்டிருப்பார்கள். info
التفاسير:

external-link copy
4 : 27

اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ زَیَّنَّا لَهُمْ اَعْمَالَهُمْ فَهُمْ یَعْمَهُوْنَ ۟ؕ

27.4. நிச்சயமாக மறுமை நாள் மற்றும் அங்கு கிடைக்கும் கூலி, தண்டனை ஆகியவற்றின் மீது நம்பிக்கைகொள்ளாத நிராகரிப்பாளர்களுக்கு நாம் அவர்களின் தீய செயல்களை அழகாக்கிக் காட்டியுள்ளோம். எனவேஅவற்றை அவர்கள் செய்வதில் நிலைத்திருக்கிறார்கள். சரியானவற்றின் பால் நேர்வழிபெறாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
5 : 27

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَهُمْ سُوْٓءُ الْعَذَابِ وَهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ۟

27.5. இப்படி வர்ணிக்கப்பட்டவர்களுக்கு இவ்வுலகில் கொலை, சிறை என்ற மோசமான தண்டனை உண்டு. மறுமையில் அவர்கள் மனிதர்களில் அதிகமாக நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள். தங்கள் குடும்பத்தாரையும் நரகில் விழச் செய்து தாமும் தமது குடும்பமும் நஷ்டமடைவார்கள். info
التفاسير:

external-link copy
6 : 27

وَاِنَّكَ لَتُلَقَّی الْقُرْاٰنَ مِنْ لَّدُنْ حَكِیْمٍ عَلِیْمٍ ۟

27.6. -தூதரே!- நிச்சயமாக நீர் உம்மீது இறக்கப்படும் இந்த குர்ஆனை தனது படைத்தல், திட்டம், சட்டம் ஆகியவற்றில் ஞானம் மிக்கவனும் அனைத்தையும் அறிந்தவனுமாகிய அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறீர். அடியார்களின் நலன்களில் எதுவும் அவனுக்குத் தெரியாமல் மறைவானது அல்ல. info
التفاسير:

external-link copy
7 : 27

اِذْ قَالَ مُوْسٰی لِاَهْلِهٖۤ اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا ؕ— سَاٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِیْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ ۟

27.7. -தூதரே!- மூஸா தம் குடும்பத்தாரிடம், “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன். அதை மூட்டியவனிடமிருந்து சரியான பாதைக்கு வழிகாட்டும் ஏதேனும் செய்தியை உங்களிடம் கொண்டுவருகிறேன் அல்லது நீங்கள் குளிர்காயும்பொருட்டு அதிலிருந்து ஏதேனும் நெருப்புக்கொள்ளியை உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்று கூறியதை நினைவுகூர்வீராக. info
التفاسير:

external-link copy
8 : 27

فَلَمَّا جَآءَهَا نُوْدِیَ اَنْ بُوْرِكَ مَنْ فِی النَّارِ وَمَنْ حَوْلَهَا ؕ— وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟

27.8. அவர் கண்ட நெருப்பை அடைந்தபோது அல்லாஹ் அவரை அழைத்துக் கூறினான்: “நெருப்பில் உள்ளவர்களும் அதனைச் சுற்றியுள்ள வானவர்களும் பரிசுத்தமாகிவிட்டார்கள். வழிகேடர்கள் வர்ணிக்கும் பொருத்தமற்ற பண்புகளை விட்டும், படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன் தூய்மையானவன்.” info
التفاسير:

external-link copy
9 : 27

یٰمُوْسٰۤی اِنَّهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ۙ

27.9. அல்லாஹ் அவரிடம் கூறினான்: -“மூஸாவே!- நிச்சயமாக நான்தான் யாவற்றையும் மிகைத்த அல்லாஹ். என்னை யாரும் மிகைக்க முடியாது. நான் படைத்த படைப்பில், அமைத்த விதியில், வழங்கிய சட்டங்களில் ஞானம்மிக்கவன். info
التفاسير:

external-link copy
10 : 27

وَاَلْقِ عَصَاكَ ؕ— فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ ؕ— یٰمُوْسٰی لَا تَخَفْ ۫— اِنِّیْ لَا یَخَافُ لَدَیَّ الْمُرْسَلُوْنَ ۟ۗۖ

27.10. உம்முடைய கைத்தடியைப் போடுவீராக. மூஸா அதனைப் போட்டார். நிச்சயமாக அது அசைந்து பாம்பைப்போன்று நகர்ந்து செல்வதைக் கண்டதும் திரும்பிப் பாரக்காமல் ஓட்டமெடுத்துவிட்டார். அப்போது அல்லாஹ் அவருக்குக் கூறினான்: “அதற்குப் பயப்படாதீர். நிச்சயமாக என்னிடத்தில் தூதர்கள் பாம்புக்கோ வேறு எதற்குமோ பயப்படமாட்டார்கள்.” info
التفاسير:

external-link copy
11 : 27

اِلَّا مَنْ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًا بَعْدَ سُوْٓءٍ فَاِنِّیْ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

27.11. ஆயினும் பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர், அதன் பின்னர் மன்னிப்புக் கோரினால் நிச்சயமாக நான் அவரை மன்னிப்பவனாகவும் அவருக்கு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றேன். info
التفاسير:

external-link copy
12 : 27

وَاَدْخِلْ یَدَكَ فِیْ جَیْبِكَ تَخْرُجْ بَیْضَآءَ مِنْ غَیْرِ سُوْٓءٍ ۫— فِیْ تِسْعِ اٰیٰتٍ اِلٰی فِرْعَوْنَ وَقَوْمِهٖ ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟

27.12. உம்முடைய சட்டையின் பிடரியை சுற்றியுள்ள இடைவெளியில் உமது கையை நுழைப்பீராக. அதன் பின்பு அது வெண்குஷ்டம் இன்றி பனிக்கட்டியைப் போன்று தூய வெண்மையாகத் தோன்றும். ஃபிர்அவ்னிடமும் அவனது சமூகத்திடமும் உம்முடைய நம்பகத்தன்மைக்கு சான்றாக இருக்கின்ற ஒன்பது சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். (அவை: கைத்தடி, பஞ்சம், விளைச்சல் குறைபாடு, வெள்ளம், பேன்கள், வெட்டுக்கிளிகள், தவளைகள், இரத்தம்). நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனுக்கு அடிபணிவதை விட்டும் வெளியேறிய கூட்டமாக இருக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
13 : 27

فَلَمَّا جَآءَتْهُمْ اٰیٰتُنَا مُبْصِرَةً قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟ۚ

27.13. நாம் மூஸாவைப் பலப்படுத்த வழங்கிய நம்முடைய தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்தபோது, அவர்கள் கூறினார்கள்: “மூசா கொண்டுவந்த இந்த சான்றுகள் தெளிவான சூனியமாகும்.” info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• القرآن هداية وبشرى للمؤمنين.
1. குர்ஆன் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டியாகவும் நற்செய்தியாகவும் இருக்கின்றது. info

• الكفر بالله سبب في اتباع الباطل من الأعمال والأقوال، والحيرة، والاضطراب.
2. அல்லாஹ்வை நிராகரிப்பது அசத்தியமான செயல்களையும் வார்த்தைகளையும் பின்பற்றுவதற்கும் குழப்பங்களுக்கும் தடுமாறித் திரிவதற்கும் காரணமாக இருக்கின்றது. info

• تأمين الله لرسله وحفظه لهم سبحانه من كل سوء.
3. அல்லாஹ் தனது தூதர்களுக்கு பாதுகாப்பளித்து, அனைத்துவிதமான தீங்குகளிலிருந்தும் அவர்களை அவன் பாதுகாத்துள்ளான். info