ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

external-link copy
53 : 22

لِّیَجْعَلَ مَا یُلْقِی الشَّیْطٰنُ فِتْنَةً لِّلَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْقَاسِیَةِ قُلُوْبُهُمْ ؕ— وَاِنَّ الظّٰلِمِیْنَ لَفِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟ۙ

22.53. அல்லாஹ் நயவஞ்சகர்களுக்கும், இறுகிப்போன இதயம்கொண்ட இணைவைப்பாளர்களுக்கும் சோதனையாக மாற்றவே தூதர் ஓதும்போது ஷைத்தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறான். நிச்சயமாக நயவஞ்சகர்களிலும் இணைவைப்பாளர்களிலுமுள்ள அநியாயக்காரர்கள் அல்லாஹ், அவனுடைய தூதர் மீது விரோதத்தில் உள்ளார்கள். சத்தியம் மற்றும் நேர்வழியை விட்டும் தூரத்தில் உள்ளார்கள். info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• استدراج الظالم حتى يتمادى في ظلمه سُنَّة إلهية.
1. அநியாயக்காரனை அவனுடைய அநியாயத்தில் உழலவிட்டுப் பிடிப்பது இறைவனின் நியதியாகும். info

• حفظ الله لكتابه من التبديل والتحريف وصرف مكايد أعوان الشيطان عنه.
2. மாற்றம், சிதைவு என்பவற்றை விட்டும் அல்லாஹ் தன் வேதத்தைப் பாதுகாத்தல், அதனை விட்டும் ஷைத்தானின் உதவியாளர்களின் சூழ்ச்சிகளை திருப்புதல். info

• النفاق وقسوة القلوب مرضان قاتلان.
3. நயவஞ்சகமும், இறுகிய உள்ளமும் கொல்லும் இரு நோய்களாகும். info

• الإيمان ثمرة للعلم، والخشوع والخضوع لأوامر الله ثمرة للإيمان.
4. நம்பிக்கை அறிவின் பிரதிபலனாகும். உள்ளச்சமும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு பணிந்து நடப்பதும் நம்பிக்கையின் பிரதிபலனாகும். info