ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

external-link copy
51 : 2

وَاِذْ وٰعَدْنَا مُوْسٰۤی اَرْبَعِیْنَ لَیْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟

2.51. நாம் மூசாவுக்கு, ஒளி மற்றும் நேர்வழியை உள்ளடக்கிய தவ்ராத்தை அருளுவதற்காக நாற்பது இரவுகளை வாக்களித்ததையும் நினைத்துப் பாருங்கள். இருந்தும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்ளேயே நீங்கள் காளைக்கன்றைக் கடவுளாக்கிக் கொண்டீர்கள். இந்த செயலின் மூலம் நீங்கள் அக்கிரமக்காரர்களாக இருந்தீர்கள். info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• عِظَمُ نعم الله وكثرتها على بني إسرائيل، ومع هذا لم تزدهم إلا تكبُّرًا وعنادًا.
1. இஸ்ராயீலின் மக்களுக்கு அல்லாஹ் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியபோதும் அது அவர்களுக்கு கர்வத்தையும் பிடிவாதத்தையும் தவிர வேறொன்றையும் அதிகப்படுத்தவில்லை. info

• سَعَةُ حِلم الله تعالى ورحمته بعباده، وإن عظمت ذنوبهم.
2. அல்லாஹ் தன் அடியார்கள் விஷயத்தில் பொறுமையாளனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான், அடியார்கள் பெரும் பாவங்களைச் செய்தாலும் சரியே. info

• الوحي هو الفَيْصَلُ بين الحق والباطل.
3. சத்தியத்தையும் அசத்தியத்தையும் நிர்ணயிப்பது வஹியே ஆகும். info