ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អាប់ឌុលហាមុីទ ពេីក៏វី

លេខ​ទំព័រ:close

external-link copy
21 : 41

وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَیْنَا ؕ— قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِیْۤ اَنْطَقَ كُلَّ شَیْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

21. அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, ‘‘எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?'' என்று கேட்பார்கள். அதற்கு அவை, ‘‘எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்'' என்றும் அவை கூறும். info
التفاسير:

external-link copy
22 : 41

وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ یَّشْهَدَ عَلَیْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا یَعْلَمُ كَثِیْرًا مِّمَّا تَعْمَلُوْنَ ۟

22. உங்கள் செவிகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் (உங்கள் பாவங்களை அவற்றை விட்டும்) மறைக்க முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள். info
التفاسير:

external-link copy
23 : 41

وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِیْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰىكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟

23. நீங்கள் உங்கள் இறைவனைப் பற்றி எண்ணிய உங்கள் (இத்தவறான) எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. ஆதலால், நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகிவிட்டீர்கள். info
التفاسير:

external-link copy
24 : 41

فَاِنْ یَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًی لَّهُمْ ؕ— وَاِنْ یَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِیْنَ ۟

24. ஆகவே, அவர்கள் (ஏதும் பேசாது சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களுக்கு தங்குமிடம் நரகம்தான். அவர்கள் மன்னிப்புக் கோரியபோதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
25 : 41

وَقَیَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَیَّنُوْا لَهُمْ مَّا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۚ— اِنَّهُمْ كَانُوْا خٰسِرِیْنَ ۟۠

25. நாம் அவர்களுக்கு, இணைபிரியாத (சில கெட்ட) தோழர்களை இணைத்து விட்டோம். அவர்கள், அவர்களுக்கு முன்னும் பின்னுமுள்ள (தீய காரியங்கள்) அனைத்தையும் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டார்கள். ஆகவே, இவர்கள் மீதும், இவர்களுக்கு முன்சென்ற (இவர்களைப் போன்ற பல) மனித, ஜின் கூட்டத்தினர் மீதும் (அவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்ற) நம் வாக்கு உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) நஷ்டமடைந்து விட்டனர். info
التفاسير:

external-link copy
26 : 41

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِیْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ ۟

26. நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் ‘‘இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர் அதை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டு பண்ணுங்கள். அதனால், நீங்கள் (அவர்களை) வென்று விடுவீர்கள்'' என்றும் கூறினார்கள். info
التفاسير:

external-link copy
27 : 41

فَلَنُذِیْقَنَّ الَّذِیْنَ كَفَرُوْا عَذَابًا شَدِیْدًا وَّلَنَجْزِیَنَّهُمْ اَسْوَاَ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟

27. ஆகவே, நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கடினமான வேதனையைச் சுவைக்கும்படி செய்வோம். நிச்சயமாக நாம் இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களைவிட மிக தீய (கொடிய) வேதனையைக் கூலியாக அவர்களுக்குக் கொடுத்தே தீருவோம். info
التفاسير:

external-link copy
28 : 41

ذٰلِكَ جَزَآءُ اَعْدَآءِ اللّٰهِ النَّارُ ۚ— لَهُمْ فِیْهَا دَارُ الْخُلْدِ ؕ— جَزَآءً بِمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟

28. அல்லாஹ்வுடைய (இந்த) எதிரிகளுக்கு, (இத்தகைய) நரகம்தான் கூலி ஆகும். நம் வசனங்களை இவ்வாறு அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாக இவர்களுக்கு நிலையான வீடு நரகத்தில்தான் இருக்கிறது. info
التفاسير:

external-link copy
29 : 41

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا رَبَّنَاۤ اَرِنَا الَّذَیْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَالْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِیَكُوْنَا مِنَ الْاَسْفَلِیْنَ ۟

29. நிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) ‘‘எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ காண்பி. அவர்கள் இழிவுக்குள்ளாகும் பொருட்டு, நாங்கள் அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழாக்கி மிதிப்போம்'' என்று கூறுவார்கள். info
التفاسير: