ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អាប់ឌុលហាមុីទ ពេីក៏វី

external-link copy
152 : 3

وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗۤ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ ۚ— حَتّٰۤی اِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَعَصَیْتُمْ مِّنْ بَعْدِ مَاۤ اَرٰىكُمْ مَّا تُحِبُّوْنَ ؕ— مِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الدُّنْیَا وَمِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الْاٰخِرَةَ ۚ— ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِیَبْتَلِیَكُمْ ۚ— وَلَقَدْ عَفَا عَنْكُمْ ؕ— وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَی الْمُؤْمِنِیْنَ ۟

152. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் கட்டளைப்படி (உஹுத் போரில்) நீங்கள் எதிரிகளை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் (உங்களுக்கு உதவி புரிந்து) அல்லாஹ் தன் வாக்கை நிச்சயமாக நிறைவேற்றி வைத்தான். ஆனால், நீங்கள் விரும்பியதை (அதாவது வெற்றியை) அல்லாஹ் உங்களுக்குக் காண்பித்ததன் பின்னர் (நபியின் கட்டளைக்கு) மாறுசெய்து அவ்விஷயத்தில் நீங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (நபி உங்களை நிறுத்திவைத்திருந்த மலையிலிருந்து விலகி இறுதியில்) தைரியத்தை இழந்துவிட்டீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உள்ளனர். உங்களில் மறுமையை விரும்புகிறவர்களும் உள்ளனர். ஆகவே, உங்களைச் சோதிப்பதற்காக (அவர்களைத் துரத்திச் சென்ற உங்களை) அவர்களைவிட்டு பின்னடையும்படி செய்தான். (இதன் பின்னரும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களை மன்னித்துவிட்டான். ஏனென்றால், அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருளுடையவன் ஆவான். info
التفاسير: