ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អាប់ឌុលហាមុីទ ពេីក៏វី

external-link copy
140 : 3

اِنْ یَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ؕ— وَتِلْكَ الْاَیَّامُ نُدَاوِلُهَا بَیْنَ النَّاسِ ۚ— وَلِیَعْلَمَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَیَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟ۙ

140. நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) காயமடைந்திருக்கின்றனர். இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறிமாறி வரும்படி நாம்தான் செய்கிறோம். ஏனென்றால், உங்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்த(றிவிப்ப)தற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. info
التفاسير: