ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អាប់ឌុលហាមុីទ ពេីក៏វី

លេខ​ទំព័រ:close

external-link copy
44 : 28

وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِیِّ اِذْ قَضَیْنَاۤ اِلٰی مُوْسَی الْاَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشّٰهِدِیْنَ ۟ۙ

44. (நபியே! தூர் ஸீனாய் என்னும் மலையில்) நாம் மூஸாவுக்குக் (கற்பலகையில் எழுதப்பட்ட) கட்டளைகளை விதித்தபோது நீர் அதன் மேற்குத் திசையிலும் இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிலும் நீர் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
45 : 28

وَلٰكِنَّاۤ اَنْشَاْنَا قُرُوْنًا فَتَطَاوَلَ عَلَیْهِمُ الْعُمُرُ ۚ— وَمَا كُنْتَ ثَاوِیًا فِیْۤ اَهْلِ مَدْیَنَ تَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِنَا ۙ— وَلٰكِنَّا كُنَّا مُرْسِلِیْنَ ۟

45. எனினும், (அவர்களுக்குப் பின்னர்) எத்தனையோ வகுப்பினரை நாம் உற்பத்தி செய்தோம். அவர்கள் சென்றும் நீண்ட காலம் ஆகிவிட்டது. (அவ்வாறிருந்தும் மூஸாவைப் பற்றிய இவ்வளவு உண்மையான சரித்திரத்தை நீர் கூறுவதெல்லாம் இறைவனால் உமக்கு அறிவிக்கப்பட்டதால்தான் என்று இவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?) மேலும், (நபியே!) மத்யன் வாசிகளிடமும் நீர் தங்கியிருக்கவில்லை. (அவ்வாறிருந்தும் அவர்களைப் பற்றிய) நம் வசனங்களை நீர் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறீர். ஆகவே, நிச்சயமாக நாம் உம்மை நம் தூதர்களில் ஒருவராகவே அனுப்பிவைத்திருக்கிறோம். (நம் வஹ்யி மூலம் கிடைத்த விஷயங்களையே நீர் அவர்களுக்கு அறிவிக்கிறீர்.) info
التفاسير:

external-link copy
46 : 28

وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّوْرِ اِذْ نَادَیْنَا وَلٰكِنْ رَّحْمَةً مِّنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰىهُمْ مِّنْ نَّذِیْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟

46. மேலும், (தூர் ஸீனாய் என்னும் மலைக்கு மூஸாவை) நாம் அழைத்த பொழுது (அந்தத்) தூர் (என்னும்) மலையின் அருகிலும் நீர் இருக்கவில்லை. எனினும், உமக்கு முன்னர் (நமது) தூதர் ஒருவருமே வராத (இந்த) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பொருட்டே உமது இறைவனின் அருளால் (இவ்விஷயம் உமக்கு அறிவிக்கப்பட்டது). அவர்கள் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக! info
التفاسير:

external-link copy
47 : 28

وَلَوْلَاۤ اَنْ تُصِیْبَهُمْ مُّصِیْبَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ فَیَقُوْلُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَیْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰیٰتِكَ وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟

47. (நபியே! உமது மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை ஒரு வேதனை வந்தடையும் சமயத்தில் ‘‘ எங்கள் இறைவனே! எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா? (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன் வசனங்களை நாங்கள் பின்பற்றி (உன்னை) நம்பிக்கை கொண்டிருப்போமே'' என்று கூறாதிருக்கும் பொருட்டே (உம்மை நம் தூதராக இவர்களிடம் அனுப்பிவைத்தோம்). info
التفاسير:

external-link copy
48 : 28

فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَاۤ اُوْتِیَ مِثْلَ مَاۤ اُوْتِیَ مُوْسٰی ؕ— اَوَلَمْ یَكْفُرُوْا بِمَاۤ اُوْتِیَ مُوْسٰی مِنْ قَبْلُ ۚ— قَالُوْا سِحْرٰنِ تَظَاهَرَا ۫— وَقَالُوْۤا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ ۟

48. எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதை நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக) இவர்கள் ‘‘ மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (என்னே!) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்து விடவில்லையா? ‘‘ (மூஸாவும், ஹாரூனும்) ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் சூனியக்காரர்கள் என்று இவர்கள் கூறியதுடன், நிச்சயமாக நாங்கள் இவ்விருவரையும் நிராகரித்து விட்டோம்'' என்றும் கூறினார்கள். info
التفاسير:

external-link copy
49 : 28

قُلْ فَاْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰی مِنْهُمَاۤ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

49. ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், அல்லாஹ்விடமிருந்து வந்த வேதங்களில் (மூஸாவுடைய வேதம், இன்னும் திரு குர்ஆன் ஆகிய) இவ்விரண்டையும் விட நேரான வழியை அறிவிக்கக்கூடிய ஒரு வேதத்தை நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக. info
التفاسير:

external-link copy
50 : 28

فَاِنْ لَّمْ یَسْتَجِیْبُوْا لَكَ فَاعْلَمْ اَنَّمَا یَتَّبِعُوْنَ اَهْوَآءَهُمْ ؕ— وَمَنْ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوٰىهُ بِغَیْرِ هُدًی مِّنَ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠

50. உமக்கு அவர்கள் பதில் சொல்லாவிடில், நிச்சயமாக அவர்கள் தங்கள் சரீர இச்சையையே பின்பற்றுகிறார்கள் என்று உறுதியாக நீர் அறிந்து கொள்வீராக. அல்லாஹ்வுடைய நேரான வழியை தவிர்த்து விட்டுத் தன் சரீர இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டோ! நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை. info
التفاسير: