ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អាប់ឌុលហាមុីទ ពេីក៏វី

លេខ​ទំព័រ:close

external-link copy
58 : 2

وَاِذْ قُلْنَا ادْخُلُوْا هٰذِهِ الْقَرْیَةَ فَكُلُوْا مِنْهَا حَیْثُ شِئْتُمْ رَغَدًا وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُوْلُوْا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطٰیٰكُمْ ؕ— وَسَنَزِیْدُ الْمُحْسِنِیْنَ ۟

58. மேலும், (உங்கள் மூதாதையர்களை நோக்கி) “நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் (விருப்பமானவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் (நுழையும்பொழுது) தலை குனிந்து செல்லுங்கள்; ‘ஹித்ததுன்' (எங்கள் பாவச்சுமை நீங்குக!) எனவும் கூறுங்கள். உங்கள் குற்றங்களை நாம் மன்னித்து விடுவோம். நன்மை செய்தவர்களுக்கு (அதன் கூலியை) அதிகப்படுத்தியும் கொடுப்போம்'' எனக் கூறியிருந்தோம். info
التفاسير:

external-link copy
59 : 2

فَبَدَّلَ الَّذِیْنَ ظَلَمُوْا قَوْلًا غَیْرَ الَّذِیْ قِیْلَ لَهُمْ فَاَنْزَلْنَا عَلَی الَّذِیْنَ ظَلَمُوْا رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟۠

59. ஆனால், வரம்பு மீறிக்கொண்டே வந்த (அ)வர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத ஒரு வார்த்தையை (‘ஹின்ததுன்' கோதுமை என்று) கூறினார்கள். அவர்கள் இவ்விதம் (மாற்றிக் கூறி) பாவம் செய்ததனால் வரம்பு மீறிய (அ)வர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம். info
التفاسير:

external-link copy
60 : 2

وَاِذِ اسْتَسْقٰی مُوْسٰی لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ؕ— فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ— قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ— كُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟

60. மூஸா தன் இனத்தாரு(டன் ‘தீஹ்' என்னும் பகுதிக்குச் சென்ற சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்)குத் தண்ணீர் தேடியபோது (நாம் அவரை நோக்கி) “நீங்கள் உங்கள் தடியால் இக்கல்லை அடியுங்கள்'' எனக் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) உடனே அதில் இருந்து பன்னிரண்டு ஊற்றுகள் உதித்தோடின. (அவருடைய பன்னிரண்டு பிரிவு) மக்கள் அனைவரும் தாங்கள் அருந்தும் தண்ணீர்த் துறையைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள். (அப்பொழுது நாம் அவர்களை நோக்கி “உங்களுக்கு) அல்லாஹ் கொடுத்த (‘மன்னு மற்றும் ஸல்வா' என்னும் உணவு பதார்த்தத்)திலிருந்து புசியுங்கள். (கல்லிலிருந்து உதித்தோடும் இந்நீரைப்) பருகுங்கள். ஆனால், பூமியில் கடுமையாக விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்'' (என்று கூறினோம்). info
التفاسير:

external-link copy
61 : 2

وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نَّصْبِرَ عَلٰی طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ یُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّآىِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ؕ— قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِیْ هُوَ اَدْنٰی بِالَّذِیْ هُوَ خَیْرٌ ؕ— اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَكُمْ مَّا سَاَلْتُمْ ؕ— وَضُرِبَتْ عَلَیْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ النَّبِیّٖنَ بِغَیْرِ الْحَقِّ ؕ— ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟۠

61. ஆனால், (நீங்கள் மூஸாவை நோக்கி) ''மூஸாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் விளையக்கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் வெளிப்படுத்தித் தரும்படி உமது இறைவனை எங்களுக்காக நீர் கேட்பீராக'' என அவரிடம் கேட்டீர்கள். அதற்கு (மூஸா) ''மேலானதற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக்கொள்(ள விரும்பு)கிறீர்களா? (அவ்வாறாயின்) நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள். நீங்கள் கேட்பது நிச்சயமாக (அங்குதான்) உங்களுக்குக் கிடைக்கும்'' என்று கூறிவிட்டார். ஆகவே, வீழ்ச்சியும் இழிவும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் (அவர்கள்) சார்ந்து விட்டார்கள். மெய்யாகவே அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததும், நியாயமின்றி இறைத்தூதர்களைக் கொலை செய்து வந்ததும் இதற்குக் காரணமாகும். இ(வ்வளவு பெரிய குற்றங்களை அவர்கள் செய்யும்படி நேர்ந்த)தற்குக் காரணம்: அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு) மாறு செய்தனர். மேலும், வரம்பு மீறிக்கொண்டிருந்தனர். info
التفاسير: