Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Berbahasa Tamil oleh Umar Syarif

அல்அன்பால்

external-link copy
1 : 8

یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ ؕ— قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ ۚ— فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَیْنِكُمْ ۪— وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

(நபியே!) ‘அன்ஃபால்’ (போரில் கிடைத்த வெற்றிப் பொருள்களைப்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: வெற்றிப் பொருள்கள், - அல்லாஹ்விற்கும், தூதருக்கும் சொந்தமானவை ஆகும். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும், உங்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்யுங்கள்; இன்னும், நீங்கள் (உண்மையான, உறுதியான) நம்பிக்கையாளர்களாக இருந்தால் (எல்லாக் காரியங்களிலும்) அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். info
التفاسير:

external-link copy
2 : 8

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِیَتْ عَلَیْهِمْ اٰیٰتُهٗ زَادَتْهُمْ اِیْمَانًا وَّعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟ۚۙ

நம்பிக்கையாளர்கள் எல்லாம், அல்லாஹ் நினைவு கூரப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும்; இன்னும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தும்; இன்னும், அவர்கள் தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)ப்பார்கள். info
التفاسير:

external-link copy
3 : 8

الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ؕ

அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; இன்னும், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள். info
التفاسير:

external-link copy
4 : 8

اُولٰٓىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ؕ— لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟ۚ

அவர்கள்தான் உண்மையில் நம்பிக்கையாளர்கள் ஆவார்கள். அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் பல பதவிகளும் மன்னிப்பும் கண்ணியமான உணவும் (குடிபானமும் சிறப்பான வாழ்க்கையும்) உண்டு. info
التفاسير:

external-link copy
5 : 8

كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَیْتِكَ بِالْحَقِّ ۪— وَاِنَّ فَرِیْقًا مِّنَ الْمُؤْمِنِیْنَ لَكٰرِهُوْنَ ۟ۙ

(நபியே!) உம் இறைவன் உம் இல்லத்திலிருந்து சத்தியத்துடன் உம்மை வெளியேற்றிய (போ)து (தர்க்கித்தது) போன்றே (எதிரிகளைப் போரில் சந்திப்பதிலும் உம்மிடம் தர்க்கிப்பார்கள்). இன்னும், நம்பிக்கையாளர்களில் நிச்சயமாக சிலர் (உம்முடன் வர) வெறுப்பார்கள். info
التفاسير:

external-link copy
6 : 8

یُجَادِلُوْنَكَ فِی الْحَقِّ بَعْدَ مَا تَبَیَّنَ كَاَنَّمَا یُسَاقُوْنَ اِلَی الْمَوْتِ وَهُمْ یَنْظُرُوْنَ ۟ؕ

(போர் அவசியம் என்ற உண்மை) அவர்களுக்கு தெளிவான பின்னர் அவர்கள் (மரணத்தை கண்கூடாக) பார்ப்பவர்களாக இருந்த நிலையில் (அந்த) மரணத்தின் பக்கம் தாங்கள் ஓட்டிச் செல்லப்படுவது போன்று (போர் கடமை என்ற அந்த) உண்மையில் உம்முடன் தர்க்கிக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
7 : 8

وَاِذْ یَعِدُكُمُ اللّٰهُ اِحْدَی الطَّآىِٕفَتَیْنِ اَنَّهَا لَكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَیْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَكُمْ وَیُرِیْدُ اللّٰهُ اَنْ یُّحِقَّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَیَقْطَعَ دَابِرَ الْكٰفِرِیْنَ ۟ۙ

(நம்பிக்கையாளர்களே! எதிரிகளின்) இரு கூட்டங்களில் ஒன்றை, நிச்சயமாக அது உங்களுக்கு என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த சமயத்தை நினைவு கூருங்கள். (அவ்விரண்டில்) ஆயுதமுடையது அல்லாததை, “அது உங்களுக்கு ஆகவேண்டும்” என்று விரும்பினீர்கள். அல்லாஹ் தன் வாக்குகளின் மூலம் உண்மையை உண்மைப்படுத்தவும் (நிலைநாட்டவும்), நிராகரிப்பவர்களின் வேரை துண்டித்து விடவும் நாடுகிறான். info
التفاسير:

external-link copy
8 : 8

لِیُحِقَّ الْحَقَّ وَیُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ۟ۚ

குற்றவாளிகள் வெறுத்தாலும் அவன் உண்மையை உண்மைப்படுத்தவும் பொய்யை அழித்துவிடவும் (நாடுகிறான்). info
التفاسير: