Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Berbahasa Tamil oleh Umar Syarif

அல்அஹ்ஸாப்

external-link copy
1 : 33

یٰۤاَیُّهَا النَّبِیُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَالْمُنٰفِقِیْنَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟ۙ

நபியே! அல்லாஹ்வை அஞ்சுவீராக! நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக மகா ஞானவானாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
2 : 33

وَّاتَّبِعْ مَا یُوْحٰۤی اِلَیْكَ مِنْ رَّبِّكَ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟ۙ

இன்னும், (நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு வஹ்யி எது அறிவிக்கப்படுகிறதோ (அது குர்ஆனாக இருந்தாலும் சரி, அல்லது ஸுன்னாவாக இருந்தாலும் சரி) அதையே பின்பற்றுவீராக! நிச்சயமாக நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
3 : 33

وَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟

இன்னும், (நபியே!) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்திரு)ப்பீராக! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன். info
التفاسير:

external-link copy
4 : 33

مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنْ قَلْبَیْنِ فِیْ جَوْفِهٖ ۚ— وَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰٓـِٔیْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ۚ— وَمَا جَعَلَ اَدْعِیَآءَكُمْ اَبْنَآءَكُمْ ؕ— ذٰلِكُمْ قَوْلُكُمْ بِاَفْوَاهِكُمْ ؕ— وَاللّٰهُ یَقُوْلُ الْحَقَّ وَهُوَ یَهْدِی السَّبِیْلَ ۟

அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அவனது உடலில் இரு உள்ளங்களை அமைக்கவில்லை. இன்னும், நீங்கள் ளிஹார் செய்த உங்கள் மனைவிகளை உங்கள் தாய்மார்களாக அவன் ஆக்கவில்லை. இன்னும், உங்கள் வளர்ப்பு பிள்ளைகளை உங்கள் சொந்த பிள்ளைகளாக அவன் ஆக்கவில்லை. அது உங்கள் வாய்களால் நீங்கள் கூறுவதாகும். அல்லாஹ் உண்மையை கூறுகிறான். அவன்தான் நல்ல பாதைக்கு வழிகாட்டுகிறான். info
التفاسير:

external-link copy
5 : 33

اُدْعُوْهُمْ لِاٰبَآىِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ ۚ— فَاِنْ لَّمْ تَعْلَمُوْۤا اٰبَآءَهُمْ فَاِخْوَانُكُمْ فِی الدِّیْنِ وَمَوَالِیْكُمْ ؕ— وَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ فِیْمَاۤ اَخْطَاْتُمْ بِهٖ وَلٰكِنْ مَّا تَعَمَّدَتْ قُلُوْبُكُمْ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟

அவர்களை அவர்களது தந்தைகளுடன் சேர்த்தே அழையுங்கள்! அதுதான் அல்லாஹ்விடம் மிக நீதமானதாகும். ஆக, நீங்கள் அவர்களின் தந்தைகளை அறியவில்லை என்றால் மார்க்கத்தில் அவர்கள் உங்கள் சகோதரர்கள் (ஆவார்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால். அப்படி இல்லை என்றால்) அவர்கள் உங்கள் உதவியாளர்கள் ஆவார்கள். நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ அதில் உங்கள் மீது குற்றம் இல்லை. என்றாலும், எ(ந்த பாவத்)தை உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்றே செய்ததோ அதுதான் குற்றம் ஆகும். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக மகா கருணையாளனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
6 : 33

اَلنَّبِیُّ اَوْلٰی بِالْمُؤْمِنِیْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ ؕ— وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰی بِبَعْضٍ فِیْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِیْنَ وَالْمُهٰجِرِیْنَ اِلَّاۤ اَنْ تَفْعَلُوْۤا اِلٰۤی اَوْلِیٰٓىِٕكُمْ مَّعْرُوْفًا ؕ— كَانَ ذٰلِكَ فِی الْكِتٰبِ مَسْطُوْرًا ۟

நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் மிக உரிமையாளர் (மிக நெருக்கமானவர், மிக ஏற்றமானவர்) ஆவார். அவருடைய மனைவிமார்கள் அவர்களுக்கு தாய்மார்கள் ஆவார்கள். இரத்த பந்தங்கள் அல்லாஹ்வின் வேதத்தின் படி அவர்களில் சிலர் சிலருக்கு உரிமையுள்ளவர்கள் ஆவார்கள், (மற்ற) நம்பிக்கையாளர்களையும் முஹாஜிர்களையும் விட. எனினும், உங்கள் (வாரிசு அல்லாத) உங்கள் சொந்தங்களுக்கு நீங்கள் ஏதும் நன்மை செய்தால் தவிர. இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கிறது. info
التفاسير: