Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

அல்இன்ஸான்

Tujuan Pokok Surah Ini:
تذكير الإنسان بأصل خلقه، ومصيره، وبيان ما أعد الله في الجنة لأوليائه.
மனிதனின் உருவாக்கத்தின் மூலத்தையும் அவனது இறுதி முடிவையும் அவனுக்கு ஞாபகமூட்டலும், சுவனத்தில் தனது நேசர்களுக்கு அல்லாஹ் தயார்செய்துவைத்துள்ளவற்றைத் தெளிவுபடுத்தலும் info

external-link copy
1 : 76

هَلْ اَتٰی عَلَی الْاِنْسَانِ حِیْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ یَكُنْ شَیْـًٔا مَّذْكُوْرًا ۟

76.1. குறிப்பிட முடியாத இல்லாமையாக இருந்த ஒரு நீண்ட காலகட்டம் மனிதனின் மீது கடந்துவிட்டது. info
التفاسير:

external-link copy
2 : 76

اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍ ۖۗ— نَّبْتَلِیْهِ فَجَعَلْنٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟ۚ

76.2. நிச்சயமாக நாம் மனிதனை ஆண் மற்றும் பெண்ணின் கலப்பு விந்திலிருந்து படைத்தோம். நாம் அவன் மீது கடமையாக்கிய பொறுப்புகளைக் கொண்டு அவனைச் சோதிக்கின்றோம். அவன் மார்க்கத்தின் பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு அவனை கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
3 : 76

اِنَّا هَدَیْنٰهُ السَّبِیْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا ۟

76.3. நிச்சயமாக நாம் தூதர்களின் மூலம் நேரான வழியைத் தெளிவுபடுத்திவிட்டோம். அதன் மூலம் தவறான வழியும் அவனுக்குத் தெளிவாகிவிட்டது. அவன் அதற்குப் பிறகு நேரான வழியை அடைந்து நம்பிக்கைகொண்ட, அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தும் அடியானாக ஆகலாம். அல்லது வழிகெட்டு நிராகரித்த, அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்த அடியானாக ஆகலாம். info
التفاسير:

external-link copy
4 : 76

اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ سَلٰسِلَاۡ وَاَغْلٰلًا وَّسَعِیْرًا ۟

76.4. நிச்சயமாக நாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நிராகரிப்பவர்களுக்கு நரகில் அவர்களை இழுத்துவரப் பயன்படும் சங்கிலிகளையும் அதில் அவர்கள் கட்டப்படும் விலங்குகளையும் கொழுந்து விட்டெரியும் நெருப்பையும் தயார்படுத்தி வைத்துள்ளோம். info
التفاسير:

external-link copy
5 : 76

اِنَّ الْاَبْرَارَ یَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًا ۟ۚ

76.5. நிச்சயமாக நம்பிக்கைகொண்டு அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுபவர்கள் மறுமை நாளில் நல்ல வாசனையுடைய கற்பூரம் கலந்து நிரப்பப்பட்ட மதுக் கிண்ணத்திலிருந்து அருந்துவார்கள். info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• خطر حب الدنيا والإعراض عن الآخرة.
1. உலகின்மீது மோகம்கொண்டு மறுமையைப் புறக்கணிப்பதன் விபரீதம். info

• ثبوت الاختيار للإنسان، وهذا من تكريم الله له.
2. மனிதனுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது. இது அல்லாஹ் மனிதனுக்கு அளித்த கண்ணியமாகும். info

• النظر لوجه الله الكريم من أعظم النعيم.
3. அல்லாஹ்வின் திருமுகத்தைப் பார்ப்பது மிகப் பெரும் இன்பங்களில் ஒன்றாகும். info