Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

external-link copy
5 : 5

اَلْیَوْمَ اُحِلَّ لَكُمُ الطَّیِّبٰتُ ؕ— وَطَعَامُ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ حِلٌّ لَّكُمْ ۪— وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ؗ— وَالْمُحْصَنٰتُ مِنَ الْمُؤْمِنٰتِ وَالْمُحْصَنٰتُ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ اِذَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ مُحْصِنِیْنَ غَیْرَ مُسٰفِحِیْنَ وَلَا مُتَّخِذِیْۤ اَخْدَانٍ ؕ— وَمَنْ یَّكْفُرْ بِالْاِیْمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهٗ ؗ— وَهُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ ۟۠

5.5. இன்றைய தினம் சுவையானவற்றை உண்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது. வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களால் அறுக்கப்பட்டவற்றை நீங்களும் நீங்கள் அறுத்தவற்றை அவர்களும் உண்ணலாம். நீங்கள் மணக்கொடை அளித்து விபச்சாரத்தில் ஈடுபடாமலும் வைப்பாட்டிகள் வைத்துக்கொள்ளாமலும் இருந்தால் சுதந்திரமான கற்பொழுக்கமுள்ள, முஃமினான பெண்களையும் உங்களுக்கு முன்னால் வேதம் வழங்கப்பட்ட யூத மற்றும் கிருஸ்தவப் பெண்களில் சுதந்திரமான, கற்பொழுக்கமுள்ளவர்களையும் மணமுடித்துக்கொள்ளலாம். அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்கிய சட்டங்களை நிராகரிப்பவரின் அமல்கள் யாவும், அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனையான ஈமானை இழந்ததனால் வீணாகிவிடும். அவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க வேண்டும் என்பதனால் மறுமை நாளில் நஷ்டமடைந்தவராவார். info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• تحريم ما مات دون ذكاة، والدم المسفوح، ولحم الخنزير، وما ذُكِرَ عليه اسْمٌ غير اسم الله عند الذبح، وكل ميت خنقًا، أو ضربًا، أو بسقوط من علو، أو نطحًا، أو افتراسًا من وحش، ويُستثنى من ذلك ما أُدرِكَ حيًّا وذُكّيَ بذبح شرعي.
1. அறுக்கப்படாமல் செத்தவை, வழிந்தோடிய இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர்கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெறிபட்டு அல்லது அடிபட்டு அல்லது உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து அல்லது கொம்பால் முட்டப்பட்டு அல்லது மிருகங்களால் கடித்துக் குதறப்பட்டு செத்தவை ஆகியவை யாவும் தடைசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் இறப்பதற்கு முன் அறுக்கப்பட்டவை விதிவிலக்கானவையாகும். info

• حِلُّ ما صاد كل مدرَّبٍ ذي ناب أو ذي مخلب.
2. பயிற்றுவிக்கப்பட்ட கூரிய பற்களையுடைய அல்லது நகங்களையுடைய வேட்டைப்பிராணிகள் வேட்டையாடியவையும் அனுமதிக்கப்பட்டுள்ளன. info

• إباحة ذبائح أهل الكتاب، وإباحة نكاح حرائرهم من العفيفات.
3. வேதக்காரர்களால் அறுக்கப்பட்ட பிராணிகளை உண்ணலாம். அவர்களிலுள்ள சுதந்திரமான, கற்பொழுக்கமுள்ள பெண்களை மணமுடித்துக் கொள்ளவும் முடியும். info