Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

external-link copy
35 : 2

وَقُلْنَا یٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَیْثُ شِئْتُمَا ۪— وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟

2.35. நாம் கூறினோம்: ஆதமே, நீரும் உம் மனைவி ஹவ்வாவும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கிருந்து நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். ஆனால் நான் தடுத்த இந்த மரத்தை மட்டும் நெருங்காதீர்கள். என்னுடைய கட்டளையை மீறி நெருங்கினால் அநியாயக்காரர்களாகி விடுவீர்கள். info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• الواجب على المؤمن إذا خفيت عليه حكمة الله في بعض خلقه وأَمْرِهِ أن يسلِّم لله في خلقه وأَمْرِهِ.
1. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர் அவனுடைய படைப்புகளில், கட்டளைகளில் சிலவற்றின் நோக்கத்தை அறியாமல் இருந்தாலும் அவற்றில் அவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவது கட்டாயமாகும். info

• رَفَعَ القرآن الكريم منزلة العلم، وجعله سببًا للتفضيل بين الخلق.
2. குர்ஆன் கல்வியின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. அதனை படைப்பினங்களுக்கு இடையிலுள்ள ஏற்றத்தாழ்வுக்கான காரணியாக ஆக்கியுள்ளது. info

• الكِبْرُ هو رأس المعاصي، وأساس كل بلاء ينزل بالخلق، وهو أول معصية عُصِيَ الله بها.
3. கர்வம் பாவங்களில் தலையாயதாகும். படைப்புகளுக்கு வரக்கூடிய துன்பங்களுக்கு கர்வமே அடிப்படையாக இருக்கின்றது. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செய்யப்பட்ட முதல் பாவம் இதுதான். info