Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

external-link copy
159 : 2

اِنَّ الَّذِیْنَ یَكْتُمُوْنَ مَاۤ اَنْزَلْنَا مِنَ الْبَیِّنٰتِ وَالْهُدٰی مِنْ بَعْدِ مَا بَیَّنّٰهُ لِلنَّاسِ فِی الْكِتٰبِ ۙ— اُولٰٓىِٕكَ یَلْعَنُهُمُ اللّٰهُ وَیَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَ ۟ۙ

2.159. யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் முஹம்மது நபியின் தூதுத்துவத்தையும், அவர் கொண்டுவந்தவற்றையும், உண்மைப்படுத்தக்கூடிய தமது வேதங்களில் நாம் இறக்கிய தெளிவான சான்றுகளை மறைப்பவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்கிவிட்டான். வானவர்கள், தூதர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் அவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து தூரமாக்குமாறு பிரார்த்தனை செய்கிறார்கள். info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• الابتلاء سُنَّة الله تعالى في عباده، وقد وعد الصابرين على ذلك بأعظم الجزاء وأكرم المنازل.
1. சோதனை அடியார்கள் விஷயத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய நியதியாகும். அதைப் பொறுமையுடன் எதிர்கொள்பவர்களுக்கு அழகிய கூலியையும் கண்ணியமான அந்தஸ்தையும் தருவதாக அவன் வாக்களித்துள்ளான். info

• مشروعية السعي بين الصفا والمروة لمن حج البيت أو اعتمر.
2. ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே "சயீ" செய்ய வேண்டும். info

• من أعظم الآثام وأشدها عقوبة كتمان الحق الذي أنزله الله، والتلبيس على الناس، وإضلالهم عن الهدى الذي جاءت به الرسل.
3. அல்லாஹ் இறக்கிய சத்தியத்தை மறைத்தல், மக்களைக் குழப்புதல், தூதர்கள் கொண்டுவந்த வழிகாட்டுதலை விட்டும் மக்களைத் தடுத்தல் ஆகியவை பெரும் பாவமாகவும் கடும் தண்டனைக்கு உரியதாகவும் இருக்கின்றது. info