Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

external-link copy
10 : 2

فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ ۙ— فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ۬۟ — بِمَا كَانُوْا یَكْذِبُوْنَ ۟

2.10. காரணம், அவர்களின் உள்ளங்களில் சந்தேகம் இருக்கிறது. அவர்களின் சந்தேகத்தை அல்லாஹ் இன்னும் அதிகப்படுத்திவிட்டான். செயலின் தன்மைக்கேற்பத்தான் கூலியும் வழங்கப்படும். அல்லாஹ்விடமும் மக்களிடமும் அவர்கள் பொய் கூறியதாலும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்த தூதை நிராகரித்ததாலும் நரகத்தின் அடித்தளத்தில் கடுமையான வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• أن من طبع الله على قلوبهم بسبب عنادهم وتكذيبهم لا تنفع معهم الآيات وإن عظمت.
1. பிடிவாதம் மற்றும் நிராகரிப்பின் காரணமாக யாருடைய உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டானோ, எவ்வளவு பெரிய அத்தாட்சிகளும் அவர்களுக்குப் பலனளிக்கப் போவதில்லை. info

• أن إمهال الله تعالى للظالمين المكذبين لم يكن عن غفلة أو عجز عنهم، بل ليزدادوا إثمًا، فتكون عقوبتهم أعظم.
2. நிராகரிப்பாளர்களான அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ் அவகாசம் அளிப்பதெல்லாம் இயலாமையாலோ, மறதியாலோ அல்ல. மாறாக, அவர்களின் பாவங்கள் அதிகமாகி பெரும் தண்டனையை அனுபவிக்கட்டும் என்பதற்காகத்தான். info