Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

external-link copy
8 : 16

وَّالْخَیْلَ وَالْبِغَالَ وَالْحَمِیْرَ لِتَرْكَبُوْهَا وَزِیْنَةً ؕ— وَیَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ ۟

16.8. நீங்கள் பயணம் செய்வதற்காகவும் உங்களின் பொருள்களை சுமந்து செல்வதற்காகவும் உங்களுக்கு அலங்காரமாக அமையும் பொருட்டும் அவன் குதிரை, கோவேரு கழுதை, கழுதை ஆகிய கால்நடைகளை உங்களுக்காக படைத்துள்ளான். தான் படைப்பதற்கு நாடியவற்றில் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான். info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• من عظمة الله أنه يخلق ما لا يعلمه جميع البشر في كل حين يريد سبحانه.
1.அல்லாஹ் தான் நாடும் பொழுதெல்லாம் எந்த மனிதனும் அறியாததைப் படைப்பது அல்லாஹ்வின் மகத்துவத்தில் உள்ளதாகும். info

• خلق الله النجوم لزينة السماء، والهداية في ظلمات البر والبحر، ومعرفة الأوقات وحساب الأزمنة.
2. அல்லாஹ் நட்சத்திரங்களை வானத்தின் அலங்காரத்திற்காகவும், தரை மற்றும் கடலின் இருள்களில் வழிகளை அறிந்து கொள்வதற்காகவும், நேரங்களை அறிந்து, காலங்களை கணக்கிட்டுக் கொள்வதற்காகவும் படைத்துள்ளான். info

• الثناء والشكر على الله الذي أنعم علينا بما يصلح حياتنا ويعيننا على أفضل معيشة.
3. நமது வாழ்வைச் சீராக்கி சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு உதவி புரியும் வகையில் நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவனை புகழ்தல். info

• الله سبحانه أنعم علينا بتسخير البحر لتناول اللحوم (الأسماك)، واستخراج اللؤلؤ والمرجان، وللركوب، والتجارة، وغير ذلك من المصالح والمنافع.
,4. மீன்களைச் சாப்பிடவும், முத்து பவளம் என்பவற்றைப் பெறவும், பயணம் செய்யவும், வியாபாரத்திற்காகவும், இன்னும் பல்வேறு நலன்கள் பயன்களுக்காகவும் கடலை வசப்படுத்தி எமக்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். info