Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil

external-link copy
8 : 14

وَقَالَ مُوْسٰۤی اِنْ تَكْفُرُوْۤا اَنْتُمْ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ— فَاِنَّ اللّٰهَ لَغَنِیٌّ حَمِیْدٌ ۟

14.8. மூஸா தம் சமூகத்தாரிடம் கூறினார்: சமூகமே, “நீங்களும் உங்களுடன் சேர்ந்து பூமியிலுள்ள அனைவரும் அல்லாஹ்வை நிராகரித்தாலும் அதனால் நீங்கள்தாம் பாதிக்கப்படுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைவரையும் விட்டு தேவையற்றவன்; தன் உள்ளமையை கொண்டு புகழுக்குரியவன். நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை அவனுக்கு எந்த பயனையும் அளித்து விடுவதில்லை; நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவனுக்கு எந்த தீங்கையும் அளித்து விடுவதில்லை.” info
التفاسير:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• من وسائل الدعوة تذكير المدعوين بنعم الله تعالى عليهم، خاصة إن كان ذلك مرتبطًا بنعمة كبيرة، مثل نصر على عدوه أو نجاة منه.
1. அழைக்கப்படுவோர் மீது அல்லாஹ் புரிந்துள்ள - குறிப்பாக தமது எதிரிக்கெதிரான உதவி அல்லது எதிரியிடமிருந்து தப்பித்தல் போன்ற பெரும் - அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவதும் தஃவாவின் வழிமுறைகளில் உள்ளவையாகும். info

• من فضل الله تعالى أنه وعد عباده مقابلة شكرهم بمزيد الإنعام، وفي المقابل فإن وعيده شديد لمن يكفر به.
2. தன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் அவற்றை அதிகப்படுத்துவதாக வாக்களிக்கிறான். இது அவனுடைய அருளாகும். அதற்கு மாறாக நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான வேதனை இருக்கிறது. info

• كفر العباد لا يضر اللهَ البتة، كما أن إيمانهم لا يضيف له شيئًا، فهو غني حميد بذاته.
3. அடியார்களின் நிராகரிப்பால் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை. அதேபோன்று அடியார்களின் நம்பிக்கையால் அவனுக்கு எந்த பயனும் ஏற்பட்டு விடுவதில்லை. அவன் தன் உள்ளமையில் அனைவரையும் விட்டு தேவையற்றவன்; புகழுக்குரியவன். info