Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Berbahasa Tamil - Abdul Hamid Baqawiy

external-link copy
37 : 7

فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ— اُولٰٓىِٕكَ یَنَالُهُمْ نَصِیْبُهُمْ مِّنَ الْكِتٰبِ ؕ— حَتّٰۤی اِذَا جَآءَتْهُمْ رُسُلُنَا یَتَوَفَّوْنَهُمْ ۙ— قَالُوْۤا اَیْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِیْنَ ۟

37. எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரை) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம் வானவர்கள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் ‘‘கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘(அவை அனைத்தும்) எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டன'' என்று கூறி, மெய்யாகவே அவர்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என்று தங்களுக்கு எதிராகவே சாட்சியம் கூறுவார்கள். info
التفاسير: