Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Berbahasa Tamil - Abdul Hamid Baqawiy

Nomor Halaman:close

external-link copy
88 : 7

قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَنُخْرِجَنَّكَ یٰشُعَیْبُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْیَتِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ— قَالَ اَوَلَوْ كُنَّا كٰرِهِیْنَ ۟ۚ

88. (ஷுஐப் நபியை நாம் நம் தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்கள் மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?'' என்று கேட்டார். info
التفاسير:

external-link copy
89 : 7

قَدِ افْتَرَیْنَا عَلَی اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِیْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰىنَا اللّٰهُ مِنْهَا ؕ— وَمَا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّعُوْدَ فِیْهَاۤ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّنَا ؕ— وَسِعَ رَبُّنَا كُلَّ شَیْءٍ عِلْمًا ؕ— عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ؕ— رَبَّنَا افْتَحْ بَیْنَنَا وَبَیْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَیْرُ الْفٰتِحِیْنَ ۟

89. ‘‘உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்'' (என்றும் கூறி, இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்'' (என்றும் பிரார்த்தித்தார்). info
التفاسير:

external-link copy
90 : 7

وَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَىِٕنِ اتَّبَعْتُمْ شُعَیْبًا اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۟

90. (ஷுஐபை) நிராகரித்த மக்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தே தீருவீர்கள்'' என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
91 : 7

فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟

91. ஆகவே, அவர்களை (மிகக் கொடூரமான) பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர். info
التفاسير:

external-link copy
92 : 7

الَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ۛۚ— اَلَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِیْنَ ۟

92. ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் (அழிந்து) எக்காலத்திலுமே வசித்திராதவர்களைப்போல் ஆகிவிட்டனர். எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தார்கள். info
التفاسير:

external-link copy
93 : 7

فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ ۚ— فَكَیْفَ اٰسٰی عَلٰی قَوْمٍ كٰفِرِیْنَ ۟۠

93. (அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூது செய்திகளைத்தான் உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே, (அதை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்'' என்று கூறினார். info
التفاسير:

external-link copy
94 : 7

وَمَاۤ اَرْسَلْنَا فِیْ قَرْیَةٍ مِّنْ نَّبِیٍّ اِلَّاۤ اَخَذْنَاۤ اَهْلَهَا بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ یَضَّرَّعُوْنَ ۟

94. நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வோர் ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் (நம்பக்கம்) பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
95 : 7

ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّیِّئَةِ الْحَسَنَةَ حَتّٰی عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَآءَنَا الضَّرَّآءُ وَالسَّرَّآءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

95. பின்னர், நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் கொண்டு) ‘‘நம் மூதாதைகளுக்குமே இத்தகைய சுக, துக்கம் ஏற்பட்டிருக்கிறது'' என்று (தாங்கள் அனுபவித்த தண்டனையை மறந்து) கூற ஆரம்பித்தனர். ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் அவர்களை (வேதனையைக் கொண்டு) திடீரென பிடித்துக்கொண்டோம். info
التفاسير: