क़ुरआन के अर्थों का अनुवाद - तमिल अनुवाद - उमर शरीफ़

पृष्ठ संख्या:close

external-link copy
19 : 74

فَقُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ

ஆக, அவன் எப்படி திட்டமிட்டாலும் அவன் அழியட்டும். info
التفاسير:

external-link copy
20 : 74

ثُمَّ قُتِلَ كَیْفَ قَدَّرَ ۟ۙ

பிறகு, அவன் எப்படி திட்டமிட்டாலும் அவன் அழியட்டும். info
التفاسير:

external-link copy
21 : 74

ثُمَّ نَظَرَ ۟ۙ

பிறகு, அவன் தாமதித்தான். info
التفاسير:

external-link copy
22 : 74

ثُمَّ عَبَسَ وَبَسَرَ ۟ۙ

பிறகு, முகம் சுளித்தான். இன்னும், கடுகடுத்தான். info
التفاسير:

external-link copy
23 : 74

ثُمَّ اَدْبَرَ وَاسْتَكْبَرَ ۟ۙ

பிறகு, அவன் புறக்கணித்தான். இன்னும், பெருமையடித்தான். info
التفاسير:

external-link copy
24 : 74

فَقَالَ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ یُّؤْثَرُ ۟ۙ

ஆக, அவன் கூறினான்: இது, (சூனியக்காரர்களிடமிருந்து) கற்றுக்கொள்ளப்பட்ட சூனியமாகவே தவிர இல்லை. info
التفاسير:

external-link copy
25 : 74

اِنْ هٰذَاۤ اِلَّا قَوْلُ الْبَشَرِ ۟ؕ

இது மனிதர்களின் சொல்லாகவே தவிர இல்லை. info
التفاسير:

external-link copy
26 : 74

سَاُصْلِیْهِ سَقَرَ ۟

“சகர்” நரகத்தில் அவனை நான் விரைவில் பொசுக்குவேன். info
التفاسير:

external-link copy
27 : 74

وَمَاۤ اَدْرٰىكَ مَا سَقَرُ ۟ؕ

“சகர்” என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா? info
التفاسير:

external-link copy
28 : 74

لَا تُبْقِیْ وَلَا تَذَرُ ۟ۚ

அது (தன்னில் யாரையும்) வாழ வைக்காது! இன்னும், (செத்து அழிந்து விடுவதற்கு யாரையும்) விட்டுவிடாது. info
التفاسير:

external-link copy
29 : 74

لَوَّاحَةٌ لِّلْبَشَرِ ۟ۚ

அது தோல்களை எரித்துவிடும். info
التفاسير:

external-link copy
30 : 74

عَلَیْهَا تِسْعَةَ عَشَرَ ۟ؕ

அதன் மீது பத்தொன்பது வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள். info
التفاسير:

external-link copy
31 : 74

وَمَا جَعَلْنَاۤ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓىِٕكَةً ۪— وَّمَا جَعَلْنَا عِدَّتَهُمْ اِلَّا فِتْنَةً لِّلَّذِیْنَ كَفَرُوْا ۙ— لِیَسْتَیْقِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَیَزْدَادَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِیْمَانًا وَّلَا یَرْتَابَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَ ۙ— وَلِیَقُوْلَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْكٰفِرُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ؕ— كَذٰلِكَ یُضِلُّ اللّٰهُ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ— وَمَا یَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ؕ— وَمَا هِیَ اِلَّا ذِكْرٰی لِلْبَشَرِ ۟۠

நரகத்தின் காவலாளிகளை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. நிராகரித்தவர்களுக்கு ஒரு குழப்பமாகவே தவிர அவர்களின் எண்ணிக்கையை நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதை) உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பிக்கையால் அதிகரிப்பதற்காகவும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும் நிராகரிப்பாளர்களும் இதன் மூலம் அல்லாஹ் என்ன உதாரணத்தை நாடுகிறான் என்று கூறுவதற்காகவும் (அவர்களின் எண்ணிக்கையை நாம் பத்தொன்பதாக ஆக்கினோம்). இவ்வாறுதான், அல்லாஹ் தான் நாடுகிறவர்களை வழிகெடுக்கிறான்; இன்னும், தான் நாடுகிறவர்களை நேர்வழி செலுத்துகிறான். உமது இறைவனின் இராணுவங்களை அவனைத் தவிர (யாரும்) அறிய மாட்டார்கள். இ(ந்த நரகமான)து இல்லை, மனிதர்களுக்கு நல்லுபதேசமாகவே தவிர! info
التفاسير:

external-link copy
32 : 74

كَلَّا وَالْقَمَرِ ۟ۙ

அவ்வாறல்ல. சந்திரன் மீது சத்தியமாக! info
التفاسير:

external-link copy
33 : 74

وَالَّیْلِ اِذْ اَدْبَرَ ۟ۙ

இரவின் மீது சத்தியமாக, அது முடியும் போது! info
التفاسير:

external-link copy
34 : 74

وَالصُّبْحِ اِذَاۤ اَسْفَرَ ۟ۙ

அதிகாலை மீது சத்தியமாக, அது ஒளி வீசும் போது! info
التفاسير:

external-link copy
35 : 74

اِنَّهَا لَاِحْدَی الْكُبَرِ ۟ۙ

நிச்சயமாக அ(ந்த நரகமான)து மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும். info
التفاسير:

external-link copy
36 : 74

نَذِیْرًا لِّلْبَشَرِ ۟ۙ

அ(ந்த நரகமான)து மனிதர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கிறது. info
التفاسير:

external-link copy
37 : 74

لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ یَّتَقَدَّمَ اَوْ یَتَاَخَّرَ ۟ؕ

உங்களில் யார் (வழிபாட்டில்) முன்னேறுவதற்கு நாடினாரோ அவருக்கு, அல்லது (நன்மையில்) பின் தங்கி (பாவத்தில் இருந்து) விடுவதற்கு நாடினாரோ அவருக்கு (இந்த நரகம் எச்சரிக்கையாக இருக்கிறது). info
التفاسير:

external-link copy
38 : 74

كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِیْنَةٌ ۟ۙ

ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்ததற்காக பிடிக்கப்படும். (-விசாரிக்கப்பட்டு அதன் செயலுக்கு தகுந்த கூலி அதற்கு கொடுக்கப்படும்) info
التفاسير:

external-link copy
39 : 74

اِلَّاۤ اَصْحٰبَ الْیَمِیْنِ ۟ؕۛ

வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர. (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.) info
التفاسير:

external-link copy
40 : 74

فِیْ جَنّٰتٍ ۛ۫— یَتَسَآءَلُوْنَ ۟ۙ

அவர்கள் சொர்க்கங்களில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள், info
التفاسير:

external-link copy
41 : 74

عَنِ الْمُجْرِمِیْنَ ۟ۙ

பாவிகளைப் பற்றி. info
التفاسير:

external-link copy
42 : 74

مَا سَلَكَكُمْ فِیْ سَقَرَ ۟

(நிராகரிப்பாளர்களே!) உங்களை சகர் நரகத்தில் நுழைத்தது எது? info
التفاسير:

external-link copy
43 : 74

قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّیْنَ ۟ۙ

அவர்கள் (-பாவிகள்) கூறுவார்கள்: தொழுகையாளிகளில் நாங்கள் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
44 : 74

وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِیْنَ ۟ۙ

இன்னும், ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாக நாங்கள் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
45 : 74

وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَآىِٕضِیْنَ ۟ۙ

இன்னும், வீணான காரியங்களில் ஈடுபடுவோருடன் சேர்ந்து நாங்கள் வீணான காரியங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தோம். info
التفاسير:

external-link copy
46 : 74

وَكُنَّا نُكَذِّبُ بِیَوْمِ الدِّیْنِ ۟ۙ

இன்னும், கூலி (கொடுக்கப்படும் மறுமை) நாளை பொய்ப்பிப்பவர்களாக நாங்கள் இருந்தோம். info
التفاسير:

external-link copy
47 : 74

حَتّٰۤی اَتٰىنَا الْیَقِیْنُ ۟ؕ

இறுதியாக, எங்களுக்கு மரணம் வந்தது. info
التفاسير: